Actor Vadivelu Gangers Movie Update : சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழில் இந்தாண்டு ரிலீஸானதில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் அரண்மனை 4 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு சைலண்டாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்(First Look Poster) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதன்படி, சுந்தர் சி(Sunder C) இயக்கும் புதிய படத்தில் வைகைப்புயல் வடிவேலுவும் நடித்து வருகிறார். கேங்கர்ஸ்(Gangers) என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தில், கேத்ரின் தெரசா, முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி ஆகியோரும் நடித்து வருகின்றனர். சுந்தர் சி – வடிவேலு கூட்டணி என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த காம்போவில் வெளியான வின்னர், லண்டன், ரெண்டு, தலைநகரம் ஆகிய படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. முக்கியமாக வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டர் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் எனலாம்.
கடைசியாக இக்கூட்டணியில் 2010ம் ஆண்டு நகரம் மறுபக்கம் திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் சுந்தர் சி – வடிவேலு(Sunder C Vadivelu Combo) இடையே பிரச்சினை என்றும், அதனால் இனிமேல் இருவரும் இணைய வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் சுந்தர் சி, வடிவேலு கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் வடிவேலு. ரெட் கார்டு பஞ்சாயத்து காரணமாக சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார் வடிவேலு.
மேலும் படிக்க - பிக் பாஸ் புது ப்ரோமோ... விஜய் சேதுபதி செட் ஆகிட்டாரா..?
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் நடிக்க வந்த வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னனில் கம்பேக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக ஃபஹத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்து வரும் வடிவேலு, அடுத்து சுந்தர் சி உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பக்கா காமெடி ஜானரில் உருவாகி வரும் கேங்கர்ஸ் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(Gangers Movie First Look Poster) உட்பட போஸ்டர்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கேங்கர்ஸ் படப்பிடிப்பை 90 சதவீதம் முடிந்துவிட்ட சுந்தர் சி, இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். அதன்பின்னர் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளாராம் சுந்தர் சி. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சுந்தர் சி – வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட்டும் பரபரப்பாக காணப்படுகிறது.