ஆட்சி அதிகாரத்தில் பங்கு... கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த விசிக.. திமுக கூட்டணியில் புகைச்சல்

கோவையில் ஒட்டப்பட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்களால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கொளுத்திப்போட்ட திரி தற்போது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Sep 18, 2024 - 07:22
 0
ஆட்சி அதிகாரத்தில் பங்கு...  கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த விசிக.. திமுக கூட்டணியில் புகைச்சல்
vck caders paste poster wants alliance government in tamil nadu

திமுக கூட்டணியில் உள்ள விசிக விரைவில் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதற்குக் காரணம் கடந்த சில வாரங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய பேச்சுக்கள்தான்.

மது ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ள விசிக அந்த மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது பரபரப்பை கிளப்பியது. அதற்கு அடுத்த சில நாட்களில் திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோவும் பேசு பொருளானது. அந்த வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசியிருந்தார் திருமாவளவன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் பேசிய திருமாவளவன், “கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என்று தற்போது திருமவாளவன் பேசியிருப்பதும் கவனம் பெற்றது.

தேர்தல் அரசியல் வேறு மது ஒழிப்புக்காக நான் எடுக்கும் அறைகூவல் வேறு என்று நான் மிகத் தெளிவாகச் சொன்னேன். நான் மிகவும் யதார்த்தமாகவே அதைக் கூறினேன். திமுகவும் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றி குறிப்பிட்டிருக்கிறது. அதிமுகவும் சொல்கிறது. விசிகவும் சொல்கிறது. இடது சாரிகளும் சொல்கிறார்கள். அப்புறம் ஏன் மதுக்கடைகளை மூட முடியவில்லை?. இந்தக் கேள்வியை எழுப்பிவிட்டு, “எல்லோரும் ஒன்றிணைந்து மது ஒழிப்பில் தேசியக் கொள்கையை உருவாக்குவோம்” என்று நான் சொன்னேன். அந்தத் தருணத்தில்தான் அதிமுகவும் மாநாட்டில் இணையலாம் என்றேன். அதில் எந்தக் காய் நகர்த்தலும் இல்லை. 

எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. மக்கள் கட்டளையை ஏற்று நான் மாநாடு நடத்துகிறேன். தேர்தல் கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. இதில், சூதாட்டம் எல்லாம் இல்லை. நம்முடைய கட்சியின் எதிர்காலத்தை, நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவு சுதந்திரமானது. அதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. அதேபோல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிக்கும் ஒரு கட்சியை கூட்டணியில் வைத்துக் கொள்ளவும், வேண்டாம் எனச் சொல்லவும் சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது. இதில் சூது, சூழ்ச்சி எல்லாம் இல்லை என்றும் கூறியிருந்தார் திருமாவளவன். 

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவில் இருந்து ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதாகவும் கூறினார் திருமாவளவன். இந்த சூழ்நிலையில்தான், 2026ஆம் ஆண்டில் ஆட்சியிலும் பங்கு ... அதிகாரத்திலும் பங்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

கோவை, அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் ஒட்டப்பட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் தனது முகநூல் பக்கத்திலும், எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது கோவையில் தான் அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் வைத்தார். அரசியல் கட்சியாய் தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்

அந்த வகையில்  கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள் அவர்களுக்கு அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். கோவையில் விசிகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களால் திமுக விசிக கூட்டணியில் புகைச்சல் ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சிஅதிமுக கூட்டணி  பக்கம் படிப்படியாக சாயத்தொடங்கியிருக்கிறது என்ற கருத்துகள் உலா வருகின்றன. அதனை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் திருமாவளவன் அதிமுக நிர்வாகிகளிடம் நட்பு பாராட்டி வருகிறார். கள்ளக்குறிச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியும், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையான அழைப்பு வந்தால் அதிமுக பங்கேற்கும் என்றும் கூறியுள்ளார். எது எப்படியோ 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புது கூட்டணி உருவானாலும் ஆச்சரியமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow