DMK Mupperum Vizha 2024 : நல்லுலகம் போற்றும் நாயகர்.. திமுக விழாவில் ஸ்டாலினை வாழ்த்திய கருணாநிதி.. உற்சாகத்தில் தொண்டர்கள்

AI Kalaignar Karunanidhi in DMK Mupperum Vizha 2024 : திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. AI தொழில்நுட்பத்தின் மூலம் பேசியது நேரில் வந்து பேசியது போல இருந்தது.

Sep 17, 2024 - 18:27
Sep 17, 2024 - 18:37
 0
DMK Mupperum Vizha 2024 : நல்லுலகம் போற்றும் நாயகர்.. திமுக விழாவில் ஸ்டாலினை வாழ்த்திய கருணாநிதி.. உற்சாகத்தில் தொண்டர்கள்
dmk mupperum vizha karunanidhi speech

AI Kalaignar Karunanidhi in DMK Mupperum Vizha 2024 : பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, திமுகவின்  பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது.இந்த முப்பெரும் விழா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.இந்த விழாவில் மறைந்த திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி பேசியதுதான் ஹைலைட். செயற்கை நுண்ணறிவியல் தொழில் நுட்பத்தின் கீழ் கருணாநிதி பேசினாலும் நேரில் வந்து பேசுவது போல இருந்தது. இதனைப் பார்த்த திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமடைந்தனர்.  

“திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு இதே நாளில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை முன்னோடிகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம்தான் திமுக.திமுக தொடங்கப்பட்டபோது அண்ணாவுக்கு 40 வயது, கருணாநிதிக்கு 25 வயது, அன்பழகனுக்கு 27 வயது. 

1957ஆம் ஆண்டு நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது.கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆன பிறகு, 1967ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த திமுக, முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அண்ணா, கருணாநிதி மறைவிற்கு பிறகு, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது திமுகவின் பவளவிழா முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மைதானம் முழுவதும் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 அடியில் திமுக கொடி பறக்க விடப்பட்டுள்ளது பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி(AI Kalaignar Speech at DMK Mupperum Vizha), முதல்வர் மு.க ஸ்டாலினை வாழ்த்தினார். கருணாநிதி பேசும் போது என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே... தந்தை பெரியார் வடித்த கொள்கையை ஓங்கி ஒலிக்கச் செய்து , கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொருப்பில் அமரச் செய்திருக்கும் தம்பி ஸ்டாலினை எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்புதான்! இந்தியாவின் முன் மாதிரி முதல்வராய், நல்லுலகம் போற்றும் நாயகனாக ஸ்டாலின் விளங்குகிறார் என்று பேசினார்.55 ஆண்டுகளால் அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதல்வராக சமத்துவம், சகோதரத்துவம் சமூக நீதி, பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின்.வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக திராவிட மாடல் என்று கூறினார்.கருணாநிதி நேரில் வந்து பேசியது போல இருந்தாக தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow