57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவு ரவுடியும், தேடப்படும் குற்றவாளியுமான சம்போ செந்திலின் எதிரியாக காக்கா தோப்பு பாலாஜி உள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆர்கே நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். அவர் 12 முறை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.50மணியளவில் புளியந்தோப்பு பகுதியில், கஞ்சா கடத்தி சென்றபோது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசாரை நோக்கி, காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், தற்காப்புக்காக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுண்டர் செய்துள்ளார்.
இதில் காக்கா தோப்பு பாலாஜிக்கு இடது பக்க மார்பில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காக்கா தோப்பு பாலாஜியின் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததால், அவரது உடலானது தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காக்கா தோப்பு பாலாஜியின் பின்னணி:
காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி (காக்காதோப்பு பாலாஜி) 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர் காக்கா தோப்பு பாலாஜி.
2011ம் ஆண்டு வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி, மனைவியின் கண் முன்னே பில்லா சுரேஷ் என்பவரை காக்கா தோப்பு பாலாஜி தரப்பு கொலை செய்தனர். அடுத்த சில மணி நேரங்களில் ரவுடி விஜி (எ) விஜய குமார் கொலை செயதனர்.
கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜியும் அவரது நண்பரான சி.டி மணியும் தேனாம்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது ரவுடி சம்போ செந்தில் தரப்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி காக்கா தோப்பு பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்தது.
கொலை, ஆட்க்கடத்தல், கட்டபஞ்சாயத்து என 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி சென்னையிம் தேடப்படும் குற்றவாளியாக ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி உள்ளார். நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டார்.
What's Your Reaction?