தமிழ்நாடு

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த சுதாகர், மத்திய அரசின் அயல் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். குறிப்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்த ஆபாஷ் குமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சிபிஐ இணை இயக்குனராக இருந்த விஜேந்திர பிதாரி கடந்த ஜனவரி மாதத்துடன் அயல் பணி முடிவுற்ற காரணத்தினால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணங்களுக்காக ஐபிஎஸ் பணியிட மாற்றம் தற்போது தமிழக உள்துறை செய்துள்ளது. அந்த அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராகவும், கபில் குமார் சரட்கர் தமிழக காவல்துறை அமலாக்கப் பணியகத்தின் ஐஜியாகவும், கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும், சந்தோஷ் குமார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், சத்தியப்பிரியா தமிழக காவல்துறை நலன் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

துரை தமிழக காவல்துறை தலைமையக பிரிவு டிஐஜியாகவும், சீமா அகர்வால் தமிழ்நாடு தீயணைப்பு துறை டிஜிபியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக டிஜிபி பொறுப்பையும் கவனிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி விவரம்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த கபில் குமார் சரட்கர் தமிழக காவதுறை அமலாக்கப் பணியகத்தின் ஐஜியாக மாற்றம்.

தமிழக காவல்துறை அமலாக்கப் பணியகத்தின் ஐஜியாக இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக மாற்றம்.

மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சத்தியப்பிரியா தமிழக காவல்துறை நலன் பிரிவு ஐஜியாக மாற்றம்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம்.

தமிழக காவல்துறை நலன் பிரிவு டிஐஜியாக இருந்த துரை தமிழக காவல்துறை தலைமையக பிரிவு டிஐஜியாக மாற்றம்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக இருந்த சீமா அகர்வாலுக்கு தமிழ்நாடு தீயணைப்பு துறை டிஜிபியாக மாற்றம்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா கூடுதலாக, பொறுப்பு டிஜிபி பொறுப்பையும் கவனிக்கவுள்ளார்.