மத்திய பட்ஜெட்.. இன்டெர்ன்ஷிப் திட்டம்.. இது அதுல்ல.. பட்டென்று சொன்ன ப.சிதம்பரம்

P Chidambaram on Union Budget 2024 : காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மத்திய பட்ஜெட்டில் வாசித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Jul 23, 2024 - 14:45
Jul 23, 2024 - 15:39
 0
மத்திய பட்ஜெட்.. இன்டெர்ன்ஷிப் திட்டம்.. இது அதுல்ல.. பட்டென்று சொன்ன ப.சிதம்பரம்
P.Chidambaram vs Nirmala sitaraman

P Chidambaram on Union Budget 2024 : லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அளித்த 3 முக்கிய வாக்குறுதிகளை மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, ஏஞ்சல் வரி ரத்து உள்ளிட்டவை காங்கிரஸ் வாக்குறுதி புத்தகத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்த பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.  நாட்டில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியளிக்கவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டெர்ன்ஷிப் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்டெர்ன்ஷிப் காலத்தில் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இளைஞர்களுக்கான இன்டெர்ன்ஷிப் திட்டம் லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பாக அளித்த வாக்குறுதி என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மத்திய பட்ஜெட்டில் வாசித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

காங்கிரஸ் வாக்குறுதி புத்தக்கத்தின் 30வது பக்கத்தில் வேலைவாய்ப்பு + ஊக்கத்தை திட்டத்தை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல் 11வது பக்கத்தில் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார். அதேபோல் ஏஞ்சல் வரி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால கோரிக்கை. அதனை ரத்து செய்துள்ளனர். இதுவும் வாக்குறுதி புத்தகத்தின் 11வது பக்கத்தில் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow