தவெக கட்சிக்கொடி ஆக.22ல் அறிமுகம் செய்யும் விஜய்.. காப்பு கட்டி விரதம் இருக்கும் புஸ்ஸி ஆனந்த்

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை வரும் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டைமிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Aug 19, 2024 - 15:24
Aug 19, 2024 - 15:30
 0
தவெக கட்சிக்கொடி ஆக.22ல் அறிமுகம் செய்யும் விஜய்.. காப்பு கட்டி விரதம் இருக்கும் புஸ்ஸி ஆனந்த்
vijay tvk flag

நடிகர் விஜய் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்.  தி கோட்  ( GOAT) திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார் விஜய். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் விஜய். தொண்டர்களுடன் சந்திப்பு, அரசியல் பேச்சுக்கள் என தமிழக வெற்றிக்கழகம் முகாமில் அனல் பறக்கிறது. 

நடிகர் விஜய் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த  திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் ஏற்றி கொடியை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டிடி கட்சியின் நிர்வாகிகள்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 300 பேர்க்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடி அறிமுகம் நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சி நல்லபடியாக நடைபெற மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டைமிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்தொடர்ச்சியாக மதுரையில் மாநாட்டை நடத்தப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடம் மாநாடு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக்கூறி சேலம், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநாட்டுக்கான இடம் தேடும் பணி தொடர்ந்தது.

இதற்கிடையே விஜய் மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலையீடுதான் காரணம் என தவெக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தற்போது விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பல ஏக்கர் காலி இடத்தை புஸ்ஸி என்.ஆனந்த் தேர்வு செய்திருப்பதாகவும் அங்கு செப்டம்பர் 22ஆம் தேதிமாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட்22ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியைவிஜய் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொடியில் 2 வண்ணங்கள் இடம்பெறும் வகையில் 3 வகையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு கொடியை விஜய் தேர்வு செய்துள்ளதாகவும், அதனையே அவர் அறிமுகம் செய்யஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக கொடியில் 3 வர்ணங்கள் இருக்கும் என்றும் வெற்றியை குறிக்கும் வகையில் வாகைப்பூ இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொடி அறிமுக விழா நடைபெறுவதை முன்னிட்டு கட்சி அலுவலகம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. அரசியல் கட்சிக்கு கொடி ரொம்பவே முக்கியம். அந்த கொடியில் உள்ள நிறங்கள் கட்சியின் கொள்கையை வெளிப்படுத்தும். கொடி அறிமுகம் முடிந்த பிறகு மாநாடு தொடர்பான வேலையை தொடங்கு விஜய் என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow