கார், பஸ்ல போனாலே தலைவலியா?.. வாந்தி வருவதை தடுக்க சிம்பிள் டிப்ஸ்

Travel Sickness Symptoms and Remedies in Tamil : பஸ், காரில் பயணிக்க வேண்டும் என்று நினைத்தாலே சிலருக்கு தலைவலி வந்து விடும். சீட்டில் உட்கார்ந்து சில கிலோமீட்டர் போவதற்குள் பலமுறை வாந்தி எடுப்பார்கள். இந்த மோசன் சிக்னெஸை தடுக்க வீட்டிலேயே பெஸ்ட் மருந்து இருக்கு.

Jul 19, 2024 - 15:33
Jul 20, 2024 - 10:21
 0
கார், பஸ்ல போனாலே தலைவலியா?.. வாந்தி வருவதை தடுக்க சிம்பிள் டிப்ஸ்

Travel Sickness Symptoms and Remedies in Tamil : சென்னை:  குழந்தைகளோ, பெரியவர்களோ சிலருக்கு பயணமே ஒத்துக்கொள்வதில்லை, மோசன் சிக்னெஸ் எனப்படும் பயண நேர பாதிப்புகள் படுத்தி எடுத்தி விடும். ஏரோபிளேன், கப்பல், ரயில், கார், பஸ் என எதில் பயணம் செய்தாலும் வாந்தியும், தலைவலியும் வந்து பயணத்தின் மகிழ்ச்சியை கெடுத்து விடும். காது வழியாக காற்று புகுந்து ஒருவித கிறுகிறுப்பையும், வாந்தி வரும் உணர்வையும் அதிகப்படுத்தும். இதனை மோசன் சிக்னஸ் அல்லது டிராவல் சிக்னஸ் என்பார்கள்.


வாந்தி வருவது ஏன்?:

பயணம் என்பது பயனுள்ள அனுபவம். மனதையும் உடலையும் மகிழ்ச்சிப்படுத்த வெளியிடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்க விரும்பினாலும் பயணத்தின் போது ஏற்படும் வாந்தி, தலைவலி பயணத்தின் மகிழ்ச்சியை பாதித்து விடும். இரண்டு வயது வரை அம்மாவின் அரவணைப்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த மோசன் சிக்னெஸ் எனப்படும் வாந்தி, தலைவலி அதிகம் இருக்கும். இது மனதளவில் ஏற்படும் பாதிப்புதான் உடலை பாதிக்கிறது. இது போன்ற பயண நேர உடல்நிலை பாதிப்பை தடுக்க கைவசம் சில மருந்துகளை தயாராக வைத்துக்கொள்ளவது நல்லது. 

காதில் இரைச்சல்: 

வாந்தி என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். வயிற்றில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதை வெளியே தள்ள வாந்தி வரும். அதே நேரத்தில் காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்புதான் உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கப்பல் அல்லது விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது. கூடவே தலைவலியும் வருகிறது. 

பயம் வேண்டாம்: 

பயணம் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்து விட்டாலே வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். லேசான வயிறுடன் பயணித்தாலே பயண வாந்தியை தடுத்து விடலாம். புளிப்பு மிட்டாய்களை சிலர் பாக்கெட்டில் பத்திரப்படுத்துக்கொள்வது நல்லது. சாதாரண சாலைகளில் பயணிக்கும் போல சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. மலை பிரதேசங்களில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் என்றால் கேட்கவே வேண்டாம் பயமயம்தான். இது ஒரு ஃபோபியாவாகவே இருக்கிறது. இதனை தடுக்க பயணத்தின் போது சில விசயங்களை பின்பற்றினாலே போதும் சரி செய்து விடலாம். காரில் ஏறினாலே வாந்தி வந்து விடும் என்ற மன பிரமையே பாதி பிரச்சினைகளுக்குக் காரணம். அந்த பயத்தில் இருந்து வெளியே வந்து விட்டாலே போது பயணம் இனிமையாகிவிடும். 

என்ன செய்யக்கூடாது:

பயணத்தின் போது பால் பொருட்கள் வேண்டாவே வேண்டாம், அதிக கலோரி கொண்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். இதை ஃபாலோ செய்தாலே இனிமையான பயணம் உங்களுக்கு அமையும். மது அருந்த வேண்டாம், அதிக சிகரெட் ஆகாது. கார், அல்லது பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு அவோமின் போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். பயணத்திற்கு கிளம்பும் போது உப்பு போட்டு லெமன் ஜூஸ் குடிக்கலாம். அதில் லைட்டாக மிளகு தூள் போட்டுக்கொண்டால் கூடுதல் பலன். புதினா இலை வாந்தியை தடுக்கும். பஸ் பயணத்திற்கும் காரில் செல்வதற்கும் மன ரீதியாக தயாரானாலே போதும் வாந்தியை தடுக்கலாம்.கார், பஸ் பயணத்தை மகிழ்ச்சியாக்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow