மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. 21 ஆண்டுகால வழக்கின் பிளாஷ்பேக்

Mayiladuthurai Court Issue Arrest Warrant on Thirumavalavan : வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமான வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jul 31, 2024 - 12:35
Jul 31, 2024 - 12:53
 0
மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. 21 ஆண்டுகால வழக்கின் பிளாஷ்பேக்
Mayiladuthurai Court Issue Arrest Warrant on VCK Thol Thirumavalavan

Mayiladuthurai Court Issue Arrest Warrant on Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003ஆம்  ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌.விஜயகுமாரி உத்தரவு.விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கினை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி மதமாற்ற தடைச்சட்டத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பேரணியை விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

போலீசார் அனுமதி வழங்காத பகுதியில் தடையை மீறி சென்றதால், போலீசாருக்கும் பேரணியில் சென்றவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு கலவரமாகி போலிசார் தடியடி நடத்தினர். விசிகவினர்கள், கட்டைகளை கொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தினர். கலவரத்தில் காவல்துறையினர் சிலருக்கும், விசிகவினர் பலருக்கும் காயம் ஏற்பட்டது. அரசு பேருந்துகள், தனியார் வேன், கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

அப்போது மயிலாடுதுறை காவல் ஆய்வாளராக இருந்த அமிர்தகுமார் உள்ளிட்ட 4 பேர் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். 

விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கினை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் 
 நீதிபதி ஆர்‌.விஜயகுமாரி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow