My V3 Ads உரிமையாளர் வழக்கில் ட்விஸ்ட்; சக்தி ஆனந்தனுக்கு ஜாமின்?
My V3 Ads Sathi Anandan Bail : சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.
My V3 Ads Sathi Anandan Bail : சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.
வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக my v 3 ads செயலியின் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி சரணடைந்தார் சக்தி ஆனந்தன்.இந்த வழக்கில் ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, சக்தி ஆனந்தன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?