Weather Report : மதுரையில் எரியுதடி மாலா.. நள்ளிரவிலும் ஹீட்டான வாட்டர்..2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

Tamil Nadu Weather Report : பாத்ரூமிற்கு போய் குழாயை திறந்து விட்டாலே தண்ணீர் தகிக்கிறது. இது புரட்டாசியா சித்திரை மாத அக்னி நட்சத்திர காலமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Sep 18, 2024 - 14:26
Sep 18, 2024 - 14:32
 0
Weather Report : மதுரையில் எரியுதடி மாலா.. நள்ளிரவிலும் ஹீட்டான வாட்டர்..2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்
today tamil nadu weather report

Tamil Nadu Weather Report : தென்மேற்கு பருவமழை காலத்தில் அக்னியை வாரி இறைத்தது போல அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கத் தொடங்கியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செமீ மழையும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1 செமீ மழையும் பெய்துள்ளது. தென்தமிழகம், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையம் பகுதியில் 41.0 ° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 18.09.2024 முதல்ர 24.09.2024 தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

தமிழகத்தில்  அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024)  அதிகபட்ச வெப்பநிலை  ஒருசில  இடங்களில்  2°- 4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகளில் 18.09.2024 முதல் 22.09.2024 வரை: மன்னார்   வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

வங்கக்கடல் பகுதிகளில் 18.09.2024 முதல் 22.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35  முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளைய தினம் 19.09.2024 தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.21.09.2024 மற்றும் 22.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow