Gold Jewellery : ஊசலாட்டத்தில் தங்கம் விலை... திருமணத்திற்கு சீதனமாக தர இப்போது தங்கம் வாங்கலாமா?

Why Indian Woman Purchase Gold Jewellery Reason in Tamil : அரை லட்சத்தை தாண்டி தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் என்ன விலை விற்றாலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. காரணம் தங்கத்தில் முதலீடு செய்வதால் அது என்றைக்கும் நஷ்டத்தை தராது என்பதனால்தான். இப்போது தங்கத்தின் விலை உச்சத்திற்கு போய் மீண்டும் இறங்கத்தொடங்கி மறுபடியும் உயர்ந்து வருகிறது.

Aug 14, 2024 - 14:31
Aug 15, 2024 - 09:55
 0
Gold Jewellery : ஊசலாட்டத்தில் தங்கம் விலை... திருமணத்திற்கு சீதனமாக தர இப்போது தங்கம் வாங்கலாமா?
Why Indian Woman Purchase Gold Jewellery Reason in Tamil

Why Indian Woman Purchase Gold Jewellery Reason in Tamil : பெண்களின் தாய் வீட்டு சீதனத்திலேயே மிகச்சிறந்த சீதனம் தங்கம்தான். புகுந்த வீட்டிற்கு போகும் மகளுக்கு பெற்றவர்கள் போட்டு அனுப்பும் தங்கம் மகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதனால்தான் மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக தங்க நகைகளை சேமிக்கத் தொடங்குகின்றனர். இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்றாலும் தங்கத்தை வாங்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 52 ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில் தங்கம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். 

ஊசலாடும் தங்கம் விலை: 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை எட்டியது.  அட்சய திருதியை கொண்டாடப்பட்ட மே மாதத்தில் 56 ஆயிரம் ரூபாயை கடந்தது தங்கம் விலை. பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதால் 5 ஆயிரம் ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்த மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் 52 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் நகை கவுரவம்

உலக தங்கச்சந்தையில் இந்தியாவிற்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. தென் மாநில திருமணங்களில் மணமகளும், மணமகனும் அணிவதற்காகவே தங்க நகைகளை வாங்குகின்றனர். தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் தவிர பிற மாதங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்காக சவரன் சவரனாக தங்கம் வாங்குகின்றனர். இப்போது ஆடி மாதத்தில் தங்கம் விலை இறங்கியதால் பலரும் தங்கம் வாங்கினர். ஆவணி மாதம் பிறக்கப்போவதால் தங்கம் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. 

தாய் வீட்டு சீதனம் தங்கம்

தாய் வீட்டு சீதனமாக மணமகளுக்கு திருமணத்தின் போது கொடுக்கப்படுகிறது. தங்கம் செல்வத்தை கொடுக்கும். பாதுகாப்பை கொடுக்கும். இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் பெற்றோர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சீதனமாக தங்கத்தை கொடுத்து அனுப்புகின்றனர். இந்திய தங்க நகை ஆபரண சந்தையில் 40 சதவிகிதம் தென்னிந்தியாவே தக்க வைத்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது உலக தங்க கவுன்சில். 

மலையாள தேசத்து மங்கையர்கள்:

கேரளாவில்தான் மணமகள்கள் அதிக அளவில் தங்க நகைகளை அணிகின்றனர். கேரளாவில் அதிகம் அணியும் நகைகளை பார்த்தால் முல்லை மொட்டு மாலை, கோதுமை சங்கிலி, லட்சுமி ஆராம், காசுமாலை, பாலக்கல் நெக்லஸ், மாங்கா மாலை, பூ தாலி மாலை, கருமணி மாலை என சரம் சரமாக அணிந்திருப்பார்கள். திருமண நாளில் சராசரியாக 40 முதல் 50 சவரன் வரை அணிந்திருப்பார்களாம் மலையாள தேசத்து மங்கையர்கள். 

தமிழ்நாட்டு தங்கப்பெண்கள்:

கேரளாவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திராவை சேர்ந்த மணமகள் தங்க நகைகளை அணிகின்றனர். தமிழ்நாட்டில் இப்போது ஆரம், மாங்காமலை, நெக்லஸ், அட்டியல், சரமாலை என வசதிக்கு ஏற்ப ரகம் ரகமாக அணிகின்றனர். இப்போது ஆண்களும் அதிக அளவில் தங்க நகை அணியத் தொடங்கியுள்ளனர். ஆண்களும் திருமண நாளில் பிரேஸ்லெட், செயின் என சவரன் கணக்கில் அணிந்து கொள்வது அதிகரித்து வருகிறது. 

ஏறி இறங்கும் தங்கம்:

ஜூலை மாத இறுதியில் கிடு,கிடுவென குறைந்து வந்த தங்கம் விலை சற்று உயர்ந்து மீண்டும் குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்தது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தங்கம் உயர்ந்து குறைந்து ஊசலாட்டத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருவதால் நகை வாங்குபவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கம் விலை மேலும் குறையுமா? கூடுமா ஒரே ஊசலாட்டமாக இருக்கே காத்திருக்கலாமே என்றும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள். நிபுணர்கள் சொல்வதைப் பொருத்தே மக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்குவார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow