ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவில் பேச வைப்போம் - கொந்தளித்த மாநில தலைவர்

இன்னும் 10 நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவிலும், பாராளுமன்றத்திலும் நான் பேசவைக்க உள்ளேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Aug 9, 2024 - 18:35
Aug 9, 2024 - 20:30
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவில் பேச வைப்போம் - கொந்தளித்த மாநில தலைவர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய ஆனந்தன்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 23 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்ட்ராங், பகுஜத் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், “வன்முறை என்பது மறைந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கும், எனக்கும் பிடிக்காத ஒன்று. ஆம்ஸ்ட்ராங் சாதி மதம் ஒரும்போது பார்க்கவில்லை. அனைவரையும் சம்மாக தான் பார்த்தவர். 15 ஆண்டுகளாக இந்த கட்சிக்கு பாடுபட்டவர் அதற்கு உறுதுணையாக துணைவியார் பக்கமலாக இருந்தார்.

தமிழ்நாட்டில் கட்டபஞ்யாத்து செய்து வருபவர்கள், ரவுடிகள், குற்றவாளிகள், அரசியல் தாதாக்கள், வழக்கறிஞர்கள், பிற அரசியைக் சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங் இறக்கவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை நாம் உலகளவில் தெரியப்படுத்தியுள்ளோம். இன்னும் 10 நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவிலும், பாராளுமன்றத்திலும் நான் பேசவைக்க உள்ளேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படைகளை, அரசியல் புள்ளிகளை காவலர்கள் கைது செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சியை விட, இரு மடங்கு எழை எளிய மக்கள் உதவி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். இடது கையில் செய்வது வலது கைக்கு தெரியக்கூடாது என செய்து வந்தவர். கல்விக்கு அதிக செலவு செய்ய தனது ஜி.பே-வில் பணத்தை போடுவார். 1000 பேருக்கு மேற்பட வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங். சட்ட கல்லூரி அமைக்க வேண்டும் என்ற ஆசை ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருந்தது.

இதையும் படிக்க: கூலிப்படை தலைவனின் உதவியோடு ரவுடி சம்போ செந்தில் தலைமறைவு?.. போலீஸார் தீவிர வேட்டை..

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்ய ஆறு மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பல தாதாக்களும், அரசியல்வாதிகளும் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் கட்சி சேர்ந்தவர்கள் காவல்துறையினர் பற்றி முன்னுக்கு பின்னாக எதிர் கருத்துகளை  கூற வேண்டாம். இருந்தபோதிலும் உண்மை குற்றவாளியை கண்டிப்பாக கைது செய்திட வேண்டும். காவல்துறை விசாரணை தொய்வு ஏற்பட்டால் நாங்கள் நீதி கேட்போம்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow