சினிமா

GOAT In EPIQ: கோட் படத்தின் வேற லெவல் அப்டேட்... மிரட்டலாக மாஸ் காட்டும் விஜய் & கோ!

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படம் ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்னொரு தரமான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

GOAT In EPIQ: கோட் படத்தின் வேற லெவல் அப்டேட்... மிரட்டலாக மாஸ் காட்டும் விஜய் & கோ!
GOAT in EPIQ

சென்னை: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ள கோட் படத்துக்கு ரசிகர்களிடம் தாறுமாறான எதிர்பார்ப்பு உள்ளது. 

விஜய்யின் முந்தைய படமான லியோ எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. லாஜிக் இல்லாத கதை, மோசமான திரைக்கதை என படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதே லோகேஷ் கனகராஜ்ஜே ஒருகட்டத்தில் ஒப்புக் கொண்டார். அதேபோல், விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரும் லியோ படத்தை பங்கமாக ட்ரோல் செய்தார். லியோ தோல்வியால் அப்செட்டான விஜய்க்கு, கோட் திரைப்படம் மூலம் வைப் கொடுக்கலாம் என வெங்கட் பிரபு தீயாக வேலை பார்த்துள்ளார். 

ஆனால், கோட் படத்தில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை. எப்போதும் வெங்கட் பிரபு கூட்டணியில் யுவனின் மேஜிக் செம மாஸ்ஸாக இருக்கும். ஆனால், கோட் படத்தில் அது மிஸ்ஸிங் என புலம்பித் தீர்த்தனர். இதற்கெல்லாம் சேர்த்து கோட் படத்தின் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தினமும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது படக்குழு.   

மூன்று பாடல்கள் உட்பட விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்து கோட் திரைப்படம் ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் வெளியாகவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்தது. அதனுடன் விஜய்யின் தரமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது. தற்போது அதனைத் தொடர்ந்து இன்னொரு மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, ஐமேக்ஸை தொடர்ந்து EPIQ டெக்னாலஜியிலும் கோட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க - கவுண்டம்பாளையம் ரிலீஸ்... அறிவு முதிர்ச்சி இல்லாம வர வேண்டாம்!

EPIQ ஸ்க்ரீன் ஐமேக்ஸை விட இன்னும் தரமான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் விஜய் & கோ-வின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு அசத்தியுள்ளது. அதில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும் துப்பாக்கிகளுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளனர். பக்கா ஆக்ஷன் மெட்டீரியலான இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்துள்ளது. பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இன்று (ஆக 09) வெளியாகியுள்ள நிலையில், கோட் படத்தின் போஸ்டரில் அவரும் தாறுமாறாக மாஸ் காட்டியுள்ளார்.