Kavundampalayam: “கவுண்டம்பாளையம் ரிலீஸ்... அறிவு முதிர்ச்சி இல்லாம வர வேண்டாம்..” ரஞ்சித் அதிரடி!

Actor Ranjith about Kavundapalayam movie Issue : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் பார்க்க வர வேண்டாம் என ரஞ்சித் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 9, 2024 - 17:36
 0
Kavundampalayam: “கவுண்டம்பாளையம் ரிலீஸ்... அறிவு முதிர்ச்சி இல்லாம வர வேண்டாம்..” ரஞ்சித் அதிரடி!
கவுண்டம்பாளையம் இயக்குநர் ரஞ்சித் பேட்டி

Actor Ranjith about Kavundapalayam Issue : மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியுள்ளார். நாடகக் காதலுக்கு எதிரானது என கவுண்டம்பாளையம் படத்தை ப்ரோமோஷன் செய்த ரஞ்சித், நான் சாதி வெறியன் தான் என வெளிப்படையாகவே பேட்டியும் கொடுத்திருந்தார். இதனிடையே ஜூலை 15ம் தேதி வெளியாகவிருந்த கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தது. அதாவது, இப்படத்தின் ட்ரெய்லரில் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்தன. 

அதோடு கவுண்டம்பாளையம் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களில் பிரச்சினை வரும் என சிலர் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று வெளியான கவுண்டம்பாளையம் படத்தை சேலத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் ரஞ்சித்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவுண்டம்பாளையம் படத்தை ரசிகர்களுடன் பார்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஒரு உச்ச நட்சத்திரமெல்லாம் கிடையாது, எளிய கலைஞன் தான். நான் ஒரு நல்ல படத்தை தான் இயக்கியுள்ளேன், இது நேர்மையான படம். குடும்பத்துக்கான, தாய்மார்களுக்கான படமாக கவுண்டம்பாளையம் இருக்கும். மேலும், காதலுக்கு எதிரியான படம் இது இல்லை, ஆனா நாடகக் காதலுக்கு எதிரான, எதிர்ப்புத் தெரிவிக்கும் படமாக இது இருக்கும் என்றார். 

நானே இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், படத்தில் தேவையற்ற வன்மம் இருப்பதாகவும், சாதிய பிளவு இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. என்னை எதிர்பர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் படம் பார்த்துவிட்டு பேசட்டும். சென்சாரில் சர்டிபிகேட் வாங்கி தான் படத்தை ரிலீஸ் செய்துள்ளேன். ஒருவேளை உங்களுக்கு இந்தப் படத்தை பார்க்கும் அளவுக்கு வயது முதிர்ச்சியோ அறிவு முதிர்ச்சியோ இல்லையென்றால் வர வேண்டாம். நல்லவர்களும் நல்ல சமூகத்தை உருவாக்க நினைப்பவர்களும் மட்டும் தியேட்டர் வரலாம் எனவும் ரஞ்சித் காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க - டாப் ஸ்டார் பிரசாந்தின் அந்தகன் விமர்சனம்

ரொம்ப கஷ்டப்பட்ட ஒரு படம் எடுத்துருக்கோம், அதுவும் சின்ன தயாரிப்பாளர். அதனால் படத்தை பார்க்காமலேயே இப்படியெல்லாம் குற்றம்சாட்ட வேண்டாம். கவுண்டம்பாளையம் படத்தை நிறைய திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விரும்பினேன், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. அதேபோல், எனக்கு எதிராக நிறைய பேர் உள்ளனர், அவர்கள் நேரில் என்னை எதிர்க்க முடியாமல் முதுகில் குத்துவதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். மேலும், கவுண்டம்பாளையம் என்பது சாதி பெயராக பார்க்க வேண்டாம், அது ஒரு தொகுதியின் பெயர் தான் எனவும், இது எல்லாம் என்னைப் பற்றிய வன்மத்தின் வெளிப்பாடு என்றும் கூறினார். அதேபோல் என்னை சிறிய டப்பிக்குள் அடைக்க பார்க்கின்றனர், ஆனால் நான் யாரும் என்னை வெறுக்கும் அளவிற்கு இருக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

மேலும், சினிமாவுக்கு சென்சார் இருப்பது போல, மொபைலில் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும். அதில் நிறைய வன்மங்கள் உள்ளன, இதனால் பலரை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவிட்டு வருகின்றனர். இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக ரஞ்சித் தனது பேட்டியில் கூறியுள்ளார்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow