Mufasa : The Lion King - சிங்கமாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா சேதுபதி?

Vijay Sethupathi Tamil Dubbing For Mufasa The Lion King Hollywood Movie : இந்த ஆண்டு வெளியாக இருக்கும் Mufasa : The Lion King திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா சேதுபதி டப்பிங் கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 14, 2024 - 19:34
Aug 15, 2024 - 15:25
 0
Mufasa : The Lion King - சிங்கமாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா சேதுபதி?
Actor Vijay Sethupathi Tamil Dubbing For Mufasa The Lion King Hollywood Movie

Vijay Sethupathi Tamil Dubbing For Mufasa The Lion King Hollywood Movie : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அனிமேஷன் படம் என்றால் அது ‘தி லயன் கிங்’ தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வால்ட் டிஸ்னி தயாரிப்பில் முதன் முதலாக 1994ம் ஆண்டு ராப் மின்கோஃப் மற்றும் ரோஜர் ஆலர்ஸ் இணைந்து இயக்கிய “தி லயன் கிங்” அனிமேஷன் வடிவில் வெளியானது. இதையடுத்து டேரல் ரூனி இயக்கத்தில் “தி லயன் கிங் II - சிம்பாஸ் பிரைடு” 1998ம் ஆண்டு வெளியாது. 

இந்நிலையில் 1994-ல் வெளியான ‘தி லயன் கிங்’(The Lion King) திரைப்படம் 2019ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஜோன் ஃபேவ்ரியூ இயக்கத்தில் லேட்டஸ்ட் அனிமேஷன் வெர்ஷனில் தத்ரூபமாக வெளியான இப்படம் படுஜோராக ஹிட் அடித்து பாக்ஸ் ஆஃபீசை நொறுக்கியது. ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டது.  இப்படத்தின் தமிழ் வெர்ஷனில், சிம்பா கேரக்டருக்கு நடிகர் சித்தார்த், ஸ்கார் - அரவிந்த் சுவாமி, நாலா - ஐஸ்வர்யா ராஜேஷ், டிமோன் - சிங்கம் புலி, பும்பா - ரோபோ ஷங்கர் ஆகியோர் டப்பிங் கொடுத்திருந்தனர். 

இந்த நிலையில் தற்போது ‘தி லயன் கிங்’ சீரிஸின் புதிய படமான “முஃபாசா - தி லயன் கிங்” (Mufasa : The Lion King) இந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பெர்ரி ஜென்கின்ஸ் இயக்குகிறார். இதற்கு முந்தைய படமான ‘தி லயன் கிங்’-ல், காட்டின் ராஜா முஃபாசா தனது மகனான சிம்பாவுக்கு பொறுப்பை ஒப்படைப்பது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். தற்போது வெளியாகவுள்ள இந்த புதிய படத்தில், ஆதரவற்ற முஃபாசா காட்டுக்கே ராஜாவானது எப்படி? என்றும் அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்த முஃபாசா மற்றும் ஸ்கார் இருவரும் நிரந்தர எதிரிகள் ஆனது எப்படி? என்றும் கதைக்களம் அமைந்துள்ளது. அண்மையில் யூடியூபில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலர், 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியில் ஷாருக்கான் மற்றும் அவரது இரு மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர். இதுகுறித்து பேசியிருக்கும் ஷாருக்கான், “அற்புதமான சகாப்தத்தைக் கொண்டு வனத்தின் அசைக்க முடியாத அரசனாகத் திகழ்ந்த முஃபாசா தனது கிரீடத்தைத் தனது மகனான சிம்பாவுக்குக் கைமாற்றிக் கொடுக்கிறது. ஒரு தந்தையாக முஃபாசாவுடன் என்னை ஆழமாகத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது. டிஸ்னியுடன் இதற்காக இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய மகன்களான ஆர்யனும், ஆப்ரானும் கூட இந்தப் பயணத்தில் இணைகிறார்கள் என்பதால் எனக்கு இது ரொம்பவே ஸ்பெஷலானதுதான். அவர்களுடன் இணைந்து டிஸ்னிக்காக பயணிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்!” என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்க: பறவையே எங்கு இருக்கிறாய்..? நினைவில் நின்ற நா. முத்துக்குமாரின் 10 பாடல்கள்!

இந்நிலையில் “முஃபாஸா - தி லயன் கிங்”(Mufasa: The Lion King Tamil Version Dubbing Artist) தமிழ் வெர்ஷனுக்கு விஜய்சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா டப்பிங் கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow