15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...

சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

Jul 16, 2024 - 02:02
Jul 18, 2024 - 16:19
 0
15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...
15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்

சென்னை விருகம்பாக்கம் அருகே 15 வயது சிறுவனை, 30 வயது நிரம்பிய பெண் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், சிறுவனை கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டுச் அந்த பெண் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண், அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு வயது ஒரு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த பெண்ணும் சிறுவன் மீது காதல் வயப்படவே இருவரும் தனிமையில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அது மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடையில் உடன் வேலை செய்தவர்களுக்கும் இருவரும் பழகிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிறுவன் அந்த பெண்ணை அக்கா என்று கூறிய நிலையில், தீவிர விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து பெற்றோர் சுதாரித்து கொண்டு இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சுற்றி திரிவதை கண்டுபிடித்தனர்.

மேலும், இதையடுத்து அந்த பெண்ணை சிறுவனின் பெற்றோர் கண்டித்த நிலையில், இருவரும் தங்களது காதலை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண், சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தபோது, மகனை மீட்க அவரது பெற்றோர் கிளாம்பாக்கத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அங்கு வருவதை கண்டதும், அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 15 வயது சிறுவனை திருமணம் ஆகாத 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள அழைத்து சென்றபோது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow