போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை உள்ளது. ஆனால், தடையை மீறி சங்கராபரணி ஆற்றங்கரை பகுதி யில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
மணல் அள்ளிச் செல்லும் முக்கிய நபர்கள், அந்தந்த பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகளை மாதக்கணக் கிலும், ரோந்து செல்லும் போலீசாரை தினசரி அடிப் படையிலும் 'மாமூலாக' கவனித்து கொள்கின்றனர். இதனால், மணல் அள்ளு வதை போலீசார் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், எல்லை யோர பகுதியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மணல் அள்ளும் நபரும் பேசிக் கொள்ளும் உரையாடல் சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.
அதில் இடம் பெற்றுள்ள உரையாடல் விபரம் பின்வருமாறு:
மணல் அள்ளும் நபர்: நைட் பீட் யாரு அண்ணா?
இன்ஸ்பெக்டர்: நைட் பீட் அய்யனாரு. ஏன்டா?
மணல் அள்ளும் நபர்: அவரு (அய்யனார்) இங்கு வந்தாரு...ஏன் இங்கு நிற் கின்றீர்கள்? என கேட்டு துரத்தி விட்டார். பசங்கள் எல்லாம் ஓடிட்டாங்க...
இன்ஸ்பெக்டர்: ஏய் ... போய் அடிக்க சொல்லுடா. அவன் வந்தா என்ன? போய் மண் அள்ள சொல்லுடா...
மணல் அள்ளும் நபர்: பசங்க பயப்படுகின்றனர்.
இன்ஸ்பெக்டர்: வெளிப்படையாக உட்கார்ந்திருந் தார்களா? நீ போய் ஏற்ற சொல்லு... நான் அங்க தான் இருக்கிறேன்... என ஆடியோ முடிகிறது.
மணல் அள்ளும் நபரிடம் காவலர் பேசிய ஆடியோ, போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக திருக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் வாய்மொழி உத்தரவாக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் பேசியது ஆய்வாளர் ராஜ்குமார் தான். எனவே இந்த விவகாரம் குறித்து தான் இடமாற்றம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் புதுச்சேரியில் தற்பொழுது பூதாகரமாகியுள்ளது.
What's Your Reaction?