Today Gold Rate In Chennai: ஒரு சவரன் 55,000ஐ தாண்டியது.. ஷாக் ஆன நகை பிரியர்கள்

Today Gold Rate In Chennai : 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் மீண்டும் 55ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஜூலை மாதம் 17ம் தேதி நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி இங்கே காணலாம்.

Jul 17, 2024 - 11:43
Jul 18, 2024 - 10:21
 0
Today Gold Rate In Chennai: ஒரு சவரன் 55,000ஐ தாண்டியது..  ஷாக் ஆன நகை பிரியர்கள்
Today Gold Rate In Chennai

சென்னை : தங்கத்தின் விலை(Gold Rate) மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.  இன்றைய (ஜூலை 17) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை(Today Gold Rate In Chennai) கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920ஆக விற்பனையாகிறது.  சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360ஆக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தில் முதலீடு செய்வதை மதிப்பு மிக்கதாக கருதுகின்றனர். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

தங்கம் விலை நிலவரம்:

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அரை லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. திடீரென குறைவதும் திடீரென உச்சத்தை தொடுவதுமாக தங்கத்தின் விலை ஊசலாட்டமாகவே இருக்கிறது. நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனையானது.

இன்றைய தினம் (ஜூலை 17)  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920ஆக விற்பனையாகிறது.  சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360ஆக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,390ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.59,120-ஆக விற்பனையாகிறது. 


வெள்ளி விலை நிலவரம்:

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1.50 ரூ.100.50 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,500 ஆக விற்பனையாகிறது. 

சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6920 ஆக விற்பனையாகிறது.  நாட்டின் பிற முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலையில் சற்றே மாற்றம் உள்ளது.

பெங்களூருவில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,228 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,625 ஆகவும் விற்பனையாகிறது. திருவனந்தபுரத்தில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,228 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,710 ஆகவும் விற்பனையாகிறது.

மும்பை நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,320 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,760 ஆகவும் விற்பனையாகிறது. டெல்லியில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.7,335 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,725 ஆகவும் விற்பனையாகிறது.

கொல்கத்தாவில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,320 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,710 ஆகவும் விற்பனையாகிறது. ஹைதராபாத் நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,320 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,710 ஆகவும் விற்பனையாகிறது. அகமதபாத் நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,325 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,715 ஆகவும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow