Aadi Perukku 2024 : ஆடிப்பெருக்கு நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

Gold Buy in Aadi Perukku Day 2024 at Chennai : ஆடிப் பெருக்கு மங்களத்தைப் பெருக்கித் தரக்கூடிய அற்புத நாள். இந்த நாளில் நம்மிடம் வசதி இருந்தால் அதற்குத் தகுந்தார் போல தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கலாம்.

Aug 3, 2024 - 12:47
Aug 3, 2024 - 15:03
 0
Aadi Perukku 2024 : ஆடிப்பெருக்கு நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
Gold Buy in Aadi Perukku Day 2024 at Chennai

Gold Buy in Aadi Perukku Day 2024 at Chennai : ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படும் இன்றைய தினம் (ஆகஸ்ட் 3) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,450க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.51,600க்கும் விற்பனையாகிறது.நேற்று ஆகஸ்ட் 2ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு240 ரூபாயும் உயர்ந்த நிலையில் இன்று கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5284 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.42,272க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் 90.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி மாதம் 18-ஆம் தினம் ஆடிப் பெருக்கு(Aadi Perukku Day 2024) பன்னெடுங்காலமாக தமிழகத்தில் காவிரி ஆறு பாய்கின்ற கரையோரம் இருக்கும் ஊர்களில் வாழ்கின்ற மக்களால் கொண்டாடப் கொண்டாடப்பட்டு வருகிற ஒரு பாரம்பரிய விழாவாக இருக்கிறது. 

ஆடி மாதம் பதினெட்டாம் தினத்தன்று பெண்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் பலவித சித்தர அன்னங்கள் படைத்து, காவிரி நதி ஓடும் படித்துறைகளில் காவிரி அம்மனை வணங்கி பொங்கலிட்டு, பழங்கள், மஞ்சள், புது தாலி சரடு மற்றும் பல பொருட்களை வைத்து அந்த அம்மனை பூஜை செய்த பின்பு புது தாலி கயிற்றில் மஞ்சள் பூசி வயதில் மூத்த சுமங்கலி பெண்கள் மூலம் அணிவித்து கொள்வர். இந்த பூஜையை புதுமண தம்பதிகள் செய்வதால் அவர்கள் இருவரும் நோய் நொடிகளற்ற நீண்ட ஆயுளும் சிறந்த மக்கட் பேறும் மங்காத செல்வ வளமும் பெற காவிரி தாய் அருளாசி புரிவாள்.

புனித நதிக்கரைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது. அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும் மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.

ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அவற்றுக்கெல்லாம் விதிவிலக்காகும். ஆடி மாதம்(Aadi Month) புதிய பொருட்கள் எதையும் வாங்கலாம் என்பது ஆன்மீக அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆடிப் பதினெட்டு என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அப்படி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கும் அளவிற்கு பணமில்லையென்றாலும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தவல்ல ஆற்றல் மிகுந்த பொருட்களான மஞ்சள் மற்றும் உப்பு போன்றவற்றை ஆடிப்பெருக்கு(Aadi Perukku Day) தினத்தன்று வாங்குவதால் வீட்டில் மங்களங்களும், சுபிட்சங்களும் பன்மடங்கு பெருகுவது நிச்சயம் என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

அட்சய திரிதியை தினத்தைப் போல ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறப்பானது என்று கருதப்படுகிறது. இந்த நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காகப் பெருகும் என்று கூறுவார்கள். இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளதால் ஏராளமானோர் நகை வாங்குவதற்கு தங்க நகைக்கடைகளில் குவிந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow