திருச்செந்தூரின் கடலோரத்தில்.. ஆவணித்திருவிழா கோலாகலம்.. மும்மூர்த்திகளாய் அருள்பாலிக்கும் முருகன்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா சனிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 2ஆம் தேதி ஆவணி தேரோட்டம் நடைபெற உள்ளது.

Aug 28, 2024 - 07:50
Aug 29, 2024 - 10:29
 0
திருச்செந்தூரின் கடலோரத்தில்.. ஆவணித்திருவிழா கோலாகலம்.. மும்மூர்த்திகளாய் அருள்பாலிக்கும் முருகன்
tiruchendur aavani festival 2024

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி  திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான  ஆவணித்திருவிழா சனிக்கிழமையன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 2ஆம் தேதி ஆவணி தேரோட்டம் நடைபெற உள்ளது.

12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 28ஆம் தேதி இன்று 5ஆம் திருநாளில்   குடவருவாயல் தீபாராதனை நடைபெறும்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலிப்பார் சண்முகர். 30ஆம்  தேதி 7ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 31ஆம் தேதி 8ஆம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சிவப்பு சாத்தி கோலத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். இது ஏழாம் திருநாளன்று நடைபெற்றது. சண்முகர் சிவப்பு நிற பட்டாடை அணிந்து செவ்வரளி, ரோஜா நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகாரத்தை வருவார்  சண்முகர். சிவப்பு சாத்தி கோலத்தின் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு அம்சம். 

அதுபோல வெள்ளை சாத்தி சப்பர கோலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும்.  வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எட்டாம் திருநாளான்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் சண்முகர்.

எட்டாம் திருநாளன்று  பிற்பகலில் சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலாவருவார். பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு. 

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் திருநாள் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கிறது. இத்திருவிழா அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன்,கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow