அன்பானவர்கள்.. அழகானவர்கள்.. அசராதவர்கள்.. நீங்க எந்த நட்சத்திரம்.. உங்க குணம் இப்படித்தானம்

Kethu Sukran Nakshatras Character in Tamil : ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் இருக்கும்.

Jul 20, 2024 - 07:06
Jul 20, 2024 - 11:05
 0
அன்பானவர்கள்.. அழகானவர்கள்.. அசராதவர்கள்.. நீங்க எந்த நட்சத்திரம்.. உங்க குணம் இப்படித்தானம்
Kethu Sukran Nakshatras Character in Tamil

Kethu Sukran Nakshatras Character in Tamil : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் நவ கிரகங்கள் ஆள்கின்றன. இந்த 12 ராசிகளிலும் இரண்டே கால் நட்சத்திரங்கள் என அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம் உள்ளது. அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என பொதுவான குணநலன்கள் உள்ளன. இன்றைய தினம் கேதுவின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பற்றியும், சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்களில்  பிறந்தவர்களின் குணங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.


கேது ஆளும் நட்சத்திரங்கள் - அசுவினி மகம் மூலம் : 

அஸ்வினி:

மேஷ ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர், எல்லாருக்கும் பிரியமானவராக விளங்குபவர். திறமையானவர், புத்தி மிகுந்தவர், கடைக்கண் சிவந்தவர். மார்பு அகன்றிருப்பவர். சாந்தமான போக்கும் கொண்டவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். 

மகம்:

சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பணக்காரர். பணியாட்கள் பலரை வைத்து வேலை வாங்குவார், போகங்களை விரும்பி அனுபவிப்பார். தெய்வபக்தி, பிதுர்பக்தி மிகுந்தவர். சஞ்சாரப் பிரியர், மகா உற்சாகமாக இருப்பவர். அழகான தோற்றம் உள்ளவர், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். 

மூலம்:

தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்வமானவர்,  சுகமான வாழ்வை விரும்புகிறவர், வசீகரமானவர். ஸ்திரமான புத்தியுள்ளவர், போகப் பிரியர், நித்திரைப் பிரியர், காரியம் செய்யும் சமர்த்துவர், சிறந்த தவயோகம் பெற்றவர், சிக்கனமானவர். கல்விமான், உறவினர்களோடு நெருங்காதவர், முன்கோபக்காரர், இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. 


சுக்கிரன் ஆளும் நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம் 

பரணி:

மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியான மனப்போக்கும் படைத்தவர்.  சமத்தானவர், அதிகமான நோய்களுக்கு உட்படாதவர், ஞானம் பெற்றவர். செல்வங்களை அடைபவர். சுகங்களை விரும்புகிறவர். பின் பக்கம் மரு இருக்கப் பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோவில்.  

பூரம்: 

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரக்காரர்கள் பிரியமாக பேசுகிறவர். தான குணம் மிக்கவர். சாந்தியுள்ளவர், அரச சேவகம் செய்வர், பணம் தேடுவதில் ஊக்கமானவர், எதிர்காலத்தை சரியாக அறிந்து நடப்பவர், வியாபாரங்களில் ஈடுபடுகிறவர், கடினமான வாக்கும், சஞ்சலமான சித்தமும் கொண்டவர். விலங்குகளுக்கு பிரியமானவர். இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது.

பூராடம்: 

தனுசு ராசியில் உள்ள பூராடம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருப்பம்போல் அமைந்த வாழ்க்கைத் துணையைப் பெற்றவர். மானஸ்தன், கர்வமுள்ளவர், பல நண்பர்களை உடையவர், உயர்ந்த உடல்வாகினர், வீசாரமுள்ளவர், பிரபுக்கள் சிநேகம் பெற்றவர். வருவதை யோசித்து நடப்பவர், தாயாருக்கு இனியவர், தன்னைச் சேர்ந்தவரை ஆதரிப்பவர். தந்திரமான தோற்றத்தினர், பொய் பேசாதவர், சஞ்சாரப் பிரியர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். திருவையாறு அருகே இந்த ஆலயம் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow