Thirumavalavan : மூக்கு அறுந்து போச்சே.. கூட்டணி பிளவு என கூச்சல் போடுகிறார்கள்... யாரை சொல்கிறார் திருமாவளவன்

VCK Thol Thirumavalavan About TVK Vijay : திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சமூகநீதி பார்வையோடு அன்பு இளவல் விஜய் பயணத்தை தொடங்கி இருப்பது நம்பிக்கை தருகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Sep 18, 2024 - 11:14
Sep 18, 2024 - 11:34
 0
Thirumavalavan : மூக்கு அறுந்து போச்சே.. கூட்டணி பிளவு என கூச்சல் போடுகிறார்கள்... யாரை சொல்கிறார் திருமாவளவன்
thol tirumavalavan press meet talks about actor vijay

VCK Thol Thirumavalavan About TVK Vijay : தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள், கூச்சல் எழுப்பினார்கள் எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் அடையாதா? பிளவு ஏற்படாதா என்று காத்து கிடந்தார்கள், எதிர்பார்த்து இருந்தார்கள் ஏமாந்து போனார்கள் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

ரெட்டமலை சீனிவாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஓட்டேரி சுடுகாட்டில்  உள்ள அவரது நினைவுசிலைக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் தவெக தலைவர் விஜய்யை பாராட்டினார்.

பெரியார் திடலில் விஜய் மரியாதை செலுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன், அதைப் பாராட்டி சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன், சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது, பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல சமூக நீதி நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது.

சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது, அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். பெரியார் என்ற சொல் பாஜகவிற்கு பிடிக்காது, ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர், அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது.

மூக்கு அறுபட்டவர்களின் கூச்சல் இது புலம்பல் இது,பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது, இப்போது தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள், கூச்சல் எழுப்பினார்கள் எப்படியாவது கூட்டணியில் விரிசல் அடையாத பிளவு ஏற்படாதா என்று காத்து கிடந்தார்கள், எதிர்பார்த்து இருந்தார்கள் ஏமாந்து போனார்கள் அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்படுகிறது.

விசிகவும் திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கிறது, முரண்பாடான அரசியல் தான் ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவு கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம்  என்று உணர்த்துகிறது.

திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது, விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம், திமுக விற்கும் அதில் உடன்பாடு உள்ளது, அன்றே அண்ணா அந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றாக வேண்டும் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

பெரியார் பிறந்தநாளில் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதை பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் தற்போது பேசியுள்ளார் திருமாவளவன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow