Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்... கஞ்சா வழக்கில் போலீஸார் அதிரடி

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 12, 2024 - 22:13
Aug 13, 2024 - 09:35
 0
Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்... கஞ்சா வழக்கில் போலீஸார் அதிரடி
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்

தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர், விரைவில் விடுதலையாகவுள்ளதாக சொல்லப்பட்டது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் சவுக்கு சங்கர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சொல்லப்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்தும் சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர். 

அதேபோல், சவுக்கு சங்கரின் உதவியாளர், கார் டிரைவர் ஆகியோர் மீதும் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தனியாக நடைபெற்று வந்ததோடு, சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக மேலும் 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சவுக்கு சங்கர் தற்போது புழல் சிறையில் இருந்து மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு நாளை (ஆக.13) நேரில் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் சவுக்கு சங்கரை மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவு உள்ளிட்ட வழக்குகள் உள்நோக்கத்துடன் பதியப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்கு, கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க - குளிர்பானம் குடித்து உயிரிழந்த குழந்தை... அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

அதேபோல், சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை எனவும், சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக தெரியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றாலும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow