Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி... தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Ex Minister Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Aug 12, 2024 - 17:11
Aug 13, 2024 - 09:36
 0
Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி... தீர்ப்பு ஒத்தி வைப்பு!
Ex Minister Senthil Balaji Case

Ex Minister Senthil Balaji Case: தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜிக்கு கடந்த ஓராண்டாக ஜாமீன் கிடைக்காமல் காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அபய் ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜியின் ஜாமீன்(Senthil Balaji Bail) மனுவை விசாரித்தது. அப்போது மற்றொரு நீதிமன்ற விசாரணையை சுட்டிக் காட்டி வழக்கை ஒத்தி வைக்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. 

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்த நிலையில், செந்தில் பாலாஜி(Senthil Balaji) தற்போது அமைச்சராக இல்லாததால் ஜாமீன் வழங்க வேண்டும் அவரது வழக்கறிஞர் முகுல் ரோஹித்கி வாதாடினார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு(Senthil Balaji Bail Petition) மீது முதலில் முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், அமலாக்கத்துறையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக முன் கணிப்பு குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு என்னவாகும் என கேள்விகள் எழுப்பினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கேள்விக்கு, அமலாக்கதுறை சார்பில் வாதாடிய சொலிட்ட ஜெனரல் துஷார் மேத்தாவால் பதில் கூற முடியவில்லை. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான வழக்கு(Senthil Balaji Case) ஜோடிக்கப்பட்டது என்றும், ஆவணங்கள் அனைத்தும் திருத்தப்பட்ட போலியானது எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் அவை அனைத்தையும் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்பிக்காமல் அமலாக்கத்துறையினர் பயன்படுத்தி வருவதாகவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மீது, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எப்போது விசாரணையை தொடங்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, மூன்று மாதங்களில் விசாரணை முடிவடையும், ஆனால் தமிழ்நாடு அரசு தான் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாகவும் கூற, அதனை நீதிபதி ஒகா ஏற்க மறுத்துவிட்டார். இதனால், சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட மனிஷ் சிஷோடியாவின் வழக்கின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கும்(Senthil Balaji Case) பொருந்துமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேநேரம் அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதம் செய்ய செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. அதேபோல், இந்த வழக்கில் அமலாக்கத்துறை சம்பந்தமில்லாமல் வாதிட்டு வருவதற்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

மேலும் படிக்க - சி.வி.சண்முகம் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்ததன் முகாந்திரம் என்ன என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டும். விசாரணை நிறைவுபெறும் வரை ஒருவரை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றமே பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. அதனை குறிப்பிட்டே செந்தில் பாலாஜிக்கு(Senthil Balaji Bail Plea) ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வழக்கு விசாரணை நடைபெறுவதை தனி வழக்காக பார்க்கலாம். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி 300 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் உள்ளார். இதனை கவனத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow