பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்த குழந்தை... அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் அந்த குளிர்பானத்தை ஆய்வு செய்து நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2024 - 21:15
Aug 13, 2024 - 09:35
 0
பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்த குழந்தை... அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!
அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை: உலக வங்கிக் குழுவுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் இணைந்து நடத்தும் தொற்று அல்லாத நோய்கள், அவசர சிகிச்சையின் பராமரிப்பு, மேலாண்மையின் தரத்தை சீர்திருத்தம் பற்றிய அறிவு பரிமாற்ற தொடர்பான மாநாடு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் 12 மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதன் நிறைவு விழாவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “பல்வேறு மிக முக்கியமான இலக்குகளை முன்வைத்து தமிழக அரசும் உலக வங்கியும் ஒன்றிணைந்து சுகாதார சீரமைப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒட்டுமொத்த மதிப்பீடு 2854.74 கோடி, இந்தத் திட்டத்திற்காக உலக வங்கியில் பங்களிப்பு என்பது 1998.32 கோடி, அதாவது 70% ஆகும். அதேபோல் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 856.40 கோடி, அதாவது 30 சதவீதம் என்றார். 2019ல் தொடங்கி 2024 வரை இந்த திட்டம் செயல்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு ஐக்கிய நாடுகளில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கான எஸ்டிஜி 3, அதாவது அனைவருக்கும் அனைத்து வாய்ந்திருக்கும் ஆரோக்கியம், நலம் என்கிற குறிக்கோளை அடைவதற்கு இந்த நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது.” 

”அந்த வகையில் தர மேம்பாடு தொற்றா நோய்கள் விபத்து, அவசர சிகிச்சை தாய் நலம் சுகாதார பேரவை என்று பல்வேறு சிறப்பு கூறிய தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கு முன்மாதிரியான மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் படி மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம் உயிர் காப்போம் 48, கலைஞரின் வருமுன் காப்போம், இதயம் காப்போம், பாதம் காப்போம், மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.” 

“கடந்த மாதம் 9ம் தேதி, வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்தில், சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட் என்று சொல்லக்கூடிய மூத்த துணை தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற இதுபோன்ற மிக முக்கியமான சுகாதாரத் திட்டங்கள் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது. அதனையறிந்து உலக வங்கியின் மூத்த அலுவலர்கள் உண்மையிலேயே மகிழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உலகத்திற்கே முன்மாதிரி திட்டமாக இருக்கிறது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்” என்றார். மேலும், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிற திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் இந்தியாவின் 12 மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு சிறப்பான நிகழ்வு இங்கு நடைபெற்றது.” 

மேலும் படிக்க - செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

“தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற அதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள வெற்றிப் பெற்ற நோய்களினால் ஏற்படுகிற மாற்றங்கள் குறித்த விஷயங்கள், விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த குழுவினர் தமிழ்நாட்டில் முகாமிட்டு பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை நேரடியாக போய் பார்க்கவும் இருக்கிறார்கள். குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மேடவாக்கத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நானும் துறையின் செயலாளரும் உலக வங்கியில் இருந்து வந்துள்ள மூத்த அலுவலர்கள் உட்பட அனைவரும் பங்கேற்கிறோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை செய்யாறில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்த செய்தி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, “உணவு ஃபுட் சேப்டி ஆபிஸர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். யாருக்கும் தெரியாமல் அங்கு ஒன்று, இங்கு ஒன்றுமாக விலை குறைந்த குளிர்பனங்களாக இருந்தாலும், உணவுப் பொருட்களாக இருந்தாலும் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் குறித்து அந்த மாவட்டத்தின் டிஓவிடம் தெரிவித்துள்ளோம். அதுபோல உணவுப் பொருட்களாக இருந்தாலும் குளிர்பானமாக இருந்தாலும் அதில் ஒரு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யும் நிலையம் வாகனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.”

“அந்த குளிர்பான மாதிரி எடுத்து ஆய்வு செய்து, தர கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நச்சுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போதிய அளவிற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 17,000க்கும் மேற்பட்ட குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு 33 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல சிறப்பு கூறிய விவகாரங்கள், தமிழ்நாட்டின் தொடர்களுக்கு உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகள் தான் காரணம். அது எங்கே தேவை இருக்கிறதோ அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது, போதுமான நிகழ்வுகளில் உணவு கட்டுப்பாட்டு துறை சேர்ந்த அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow