சினிமா

Kalki OTT Release: பிரபாஸின் இண்டஸ்ட்ரியல் ஹிட் மூவி... கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா!

பிரபாஸ் நடிப்பில் ஜூன் 27ம் தேதி வெளியான கல்கி திரைப்படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூலித்த கல்கி, தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

Kalki OTT Release: பிரபாஸின் இண்டஸ்ட்ரியல் ஹிட் மூவி... கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா!
Kalki OTT Release Date

சென்னை: பிரபாஸின் கல்கி திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கல்கி. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  

அதேபோல், ராஜமெளலி, துல்கர் சல்மான் உட்பட சிலர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். பான் இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான கல்கி படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மகாபாரதத்தை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ் ஆகியவை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறியிருந்தனர். இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் கல்கியின் மேக்கிங் ஒரு புதிய முயற்சி எனவும், இது இந்திய சினிமாவுக்கு நல்ல தொடக்கம் என்றும் விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். 

அதேநேரம் கல்கி முதல் பாகத்தில் அமிதாப் பச்சனின் கேரக்டர் மட்டுமே ரசிக்கும்படியாக இருந்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர். பிரபாஸ் கேரக்டரில் எந்த முக்கியத்துவம் இல்லை என்றும், முக்கியமாக வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசன் இரண்டே காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து கல்கி இரண்டாம் பாகத்தில் தரமான சம்பவம் இருக்கும் எனவும் படக்குழு தரப்பில் சொல்லப்பட்டது. விமர்சன ரீதியாக சில நெகட்டிவ் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை கடந்தது கல்கி. 

மேலும் படிக்க - விஜய்யின் கோட் ட்ரெய்லர் விரைவில்

முதல் நாளில் 190 கோடி ரூபாய் வரை வசூலித்த கல்கி, அடுத்தடுத்த நாட்களிலும் கலெக்ஷனில் மாஸ் காட்டியது. இதனால் முதல் 5 நாட்களிலேயே 500 கோடியை கடந்து சாதனை படைத்தது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ் படங்கள் தோல்வியடைந்தன. கல்கிக்கு முன்பு வெளியான சலார் மட்டுமே, பிரபாஸுக்கு கம்பேக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக கல்கி திரைப்படத்தில் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார் பிரபாஸ்.

இந்நிலையில், கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது உறுதியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 23ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில், அமேசான் தளத்தில் வெளியாகும் கல்கி படத்தை பார்க்க, ஓடிடி ரசிகர்கள் இப்போதே ரெடியாகிவிட்டனர். கல்கி படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்தனர். தற்போது வெளியான கல்கி ஓடிடி ரிலீஸ் அப்டேட் அவர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.