தமிழ்நாடு

மீண்டும் நடந்த கொலைவெறி தாக்குதல்.. இளைஞனின் வன்மத்திற்கு இரையான இளம்பெண்

மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கடைக்குள் புகுந்து இளைஞர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை அருகே செயல்பட்டு வரும் தனியார் ஜெராக்ஸ் கடை ஒன்றில் லாவண்யா என்ற இளம் பெண் கடந்த  நான்கு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த  25 வயதான சித்திக் ராஜா என்ற இளைஞர் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். 

மேலும், தினமும் லாவண்யா பணிப்புரியும் கடைக்கு சென்று தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையிலிருந்த லாவண்யாவிடம், சித்திக் தன்னை காதலிக்கும் படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக், கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த லாவண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று தஞ்சாவூர் மாவட்டம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய ரமணி என்பவரை அவரது காதலன் பள்ளி வளாகத்திலேயே குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒத்தக்கடை அருகே இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்றும் காவல்துறையினர் மெத்தனமாக இருப்பது இந்த செயல் மூலம் தெரிகிறது என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.