வால்பாறையில் அதிகனமழை நிலச்சரிவு..நீலகிரி,கோவைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே

Red Alert Issues in Coimbatore : வால்பாறை அருகே சோலையார் இடது கரைபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருந்த பாட்டி ராஜேஸ்வரி மற்றும் பேத்தி ஜனன பிரியா(14) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Jul 30, 2024 - 15:03
Jul 31, 2024 - 10:38
 0
வால்பாறையில் அதிகனமழை நிலச்சரிவு..நீலகிரி,கோவைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே
Tamil Nadu Weather Update

Red Alert Issues in Coimbatore : நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்து மின் தடை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வால்பாறை அருகே சோலையார் இடது கரைபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருந்த பாட்டி ராஜேஸ்வரி மற்றும் பேத்தி ஜனன பிரியா(14) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 31 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், கோவையில் 24 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (30.07.2024) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக  இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய தினம் ( ஜூலை 31) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக  இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

01.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

04.08.2024 மற்றும் 05.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow