ஜெயலலிதாவின் நகைகள் யாருக்கு சொந்தம்... மறைந்தும் மறையாத சர்ச்சை

Jayalalitha Property Case : கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள இந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.

Jul 30, 2024 - 14:35
Jul 31, 2024 - 10:38
 0

Jayalalitha Property Case :தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல் 1996ஆண்டு கால கட்டத்தில் முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள், பட்டுப்புடவைகள், விலையுயர்ந்த காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள், ரத்தினக் கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் உள்பட 468 நகைகள் பறிமுதல் பட்டியலில் இடம்பெற்றன. அத்துடன், 11 ஆயிரத்து 344 புடவைகளும், 750 காலணிகள் மற்றும் 250 சால்வைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏசி இயந்திரங்கள் 44, 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 215 அழகிய வேலைபாடுகளுடைய கண்ணாடிகள் கைப்பற்றப்பட்டன.

கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள இந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர்,
கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார். அதில், 28 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜெயலலிதாவின் நகைகளுக்கு உரிமை கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow