கண்ணில் மச்சம்.. காதல் மலருமா? மச்ச சாஸ்திரம் சொல்வதென்ன?

Samudrika Shastra Moles Luck : நமது உடம்பில் குறிப்பிட்ட இடத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும் என மச்ச சாஸ்திரம் சொல்கிறது.வலது கையில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

Jul 30, 2024 - 14:16
Jul 31, 2024 - 10:38
 0

Samudrika Shastra Moles Luck : சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். மச்சம் ஏற்படுவதற்கும் கிரகங்கள்தான் காரணமாக இருக்கின்றன. 

ராகு கேது கிரகங்களும், ரத்தத்திற்கு காரகரான செவ்வாயும் மச்சத்திற்கு காரணமாகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக ராகு கேது தொடர்பு பெற்று சனி பார்வை பெற்றால் மச்சம் அதிகம் இருக்கும் என ஜோதிட அலங்காரம் சொல்கிறது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பார்களாம். 

ஆண்களுக்கு  இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்க்கமான ஆயுள். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவாராம். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.  வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.  வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow