Kanguva: கங்குவா ரன்னிங் டைம்... OTT ரிலீஸில் புது சிக்கல்... சூர்யா ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரன்னிங் டைம் குறித்தும், இதன் ஓடிடி ரிலீஸ் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கங்குவா படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அக்.10ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இதனால் ரஜினியின் வேட்டையனுக்காக அக்.10 ரிலீஸில் இருந்து பின்வாங்கியது கங்குவா. இதுபற்றி மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில், சூர்யாவே வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை. தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர்ஸ், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதனால் கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கங்குவா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால், இந்தப் படத்தை சிங்கிளாக தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாகவுள்ளது. அதேபோல், இந்தி ரிலீஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம். இதற்காக ஓடிடி ரிலீஸிலும் கங்குவா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியில் வெளியாகும் தமிழ்ப் படங்களை 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்தியில் வெளியிட அதிக தியேட்டர்கள் கிடைக்கும்.
கங்குவா திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கோடிகளில் வசூலிக்க வேண்டுமானால், இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை. இதனால், கங்குவா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழில் வெளியாகும் படங்கள் அனைத்தும், திரையரங்கில் ரிலீஸாகி ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வருகின்றன. இதனடிப்படையில் பார்த்தால் கங்குவா படத்திற்காக 8 வாரங்கள் வரை ஓடிடி ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க - ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய என்ன காரணம்?
இதனிடையே கங்குவா படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் மொத்தம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை ஓடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்குவா இரண்டாம் பாகமும் உருவாகவிருப்பதால், முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்திற்குள்ளாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
What's Your Reaction?