Jayam Ravi : “திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்..” மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி!

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Sep 9, 2024 - 12:11
Sep 9, 2024 - 13:04
 0
Jayam Ravi : “திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்..” மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி!
Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான ‘ஜெயம்’ ரவி, தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சில தினங்களாக இதுகுறித்து செய்திகள் வெளியாகிவந்த நிலையில், தற்போது ஜெயம் ரவியே இதனை உறுதி செய்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

எடிட்டர் மோகன் பல தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தார். அப்படி தெலுங்கில் ஹிட் அடித்த ஜெயம் படத்தை தமிழில் ரீமேக் செய்த அவர், அதில் தனது மகன் ராஜாவை இயக்குநராகவும், ஜெயம் ரவியை ஹீரோவாகவும் களமிறக்கினார். ஜெயம் வெற்றிப் பெற்றதை அடுத்து தமிழில் பிஸியான ஜெயம் ரவி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார் ஜெயம் ரவி. ஒருகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரத் தொடங்கிய அவர், ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 2009ம் ஆண்டு நடைபெற்றது. 

திருமணமானது முதல் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர், இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும் உள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது ஜெயம் ரவியும் ஆர்த்தியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதும் வழக்கம். ஜெயம் ரவிக்கு எல்லாவிதத்திலும் சப்போர்ட்டாக இருந்தார் ஆர்த்தி. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

மேலும் படிக்க - பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

அதேபோல், தனது இன்ஸ்டாவில் ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்திருந்தார் ஆர்த்தி. ஆனாலும் ஏற்கனவே கமிட்டான பிரதர்ஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார் ஜெயம் ரவி. இந்நிலையில் தற்போது தனது விவாகரத்து குறித்து ஜெயம் ரவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள், வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை ஊடகத்துறை, சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நேர்னமயாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். 

எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன. இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள், மக்களுக்கு மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow