சினிமா

JayamRavi: “என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக..” மனைவியை பிரிய ஜெயம் ரவி சொன்ன காரணம்.. உண்மை இதுதானா?

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : நடிகர் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சில தினங்களாகவே இதுகுறித்து செய்திகள் வெளியாகிவந்த நிலையில், திடீரென மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JayamRavi: “என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக..” மனைவியை பிரிய ஜெயம் ரவி சொன்ன காரணம்.. உண்மை இதுதானா?
ஜெயம் ரவி மனைவியை பிரிய காரணம் என்ன?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளிநாடு டூர் சென்று வந்த ஜெயம் ரவி, திடீரென இப்படியொரு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகிலும் இந்தச் சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருமே சினிமா பின்னணி கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே அவர்களது பிரிவுக்கு காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல பரிலேனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக ஜெயம் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும், என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவியின் அறிக்கையில் உள்ள இந்த வரிகள் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் திருமணம் செய்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இவர்களது திருமணம் அவ்வளவு எளிதில் நடக்கவில்லை என்பது தான் உண்மை.  

ஜெயம் ரவி வீட்டில் அவரது குடும்பத்தினர் அனைவருமே காதல் திருமணம் செய்தவர்கள் தான். அப்படி இருந்தும் ஆர்த்தியை திருமணம் செய்ய வேண்டாம் என ஜெயம் ரவிக்கு அவர்கள் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஆர்த்தியின் அம்மா சுஜாதா நடிகை என்பதோடு, பிரபல சீரியல், சினிமா தயாரிப்பாளர் ஆவார். ஆர்த்தியின் அப்பா விஜயகுமாரும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல், ஆர்த்தியின் பாட்டி கல்பனாவும் எம்ஜிஆர் உட்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். ஜெயம் ரவி குடும்பத்தில் அவர் அப்பா பிரபல எடிட்டர், தயாரிப்பாளர். அண்ணன் ராஜா பிரபல இயக்குநர். 

நடிகை குஷ்புவின் மூலமாக தான் ஜெயம் ரவிக்கு ஆர்த்தியின் நட்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஒருவழியாக இருவருக்கும் திருமணம் நடைபெற, அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா தயாரித்த படங்கள் தோல்வியடைந்துள்ளது. இதனால் அவருக்கு பல கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஜெயம் ரவி எந்த படங்களில் நடிக்க வேண்டும் என, அவரது மாமியார் சுஜாதாவே கதை கேட்டு அட்வான்ஸ் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்ல என்றாலும், இதெல்லாம் தான் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையேயான மனகசப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.  

அப்போது முதல் ஆர்த்தியின் நடவடிக்கைகள் ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை என்றும், இருவருமே ஈகோ காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் பொன்னியின் செல்வனில் நடித்த ஒரு நடிகைக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இன்னொரு பக்கம் ஒரு பாடகியுடன் ஜெயம் ரவி நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் ஜெயம் ரவி – ஆர்த்தி இடையேயான மோதல் தற்போது விவகாரத்து வரை சென்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க - ஷாக்கிங்! மனைவி ஆர்த்தியை பிரிந்தார் நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் அறிக்கையில், என்னை சார்ந்தவர்கள் நலன், அவர்கள் நல்வாழ்விற்காக என குறிப்பிட்டுள்ளார். இது யாரை மனதில் வைத்து ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார் என்பதும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்திற்காகவா அல்லது மகன்களுக்காக இப்படியொரு முடிவை ஜெயம் ரவி எடுத்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.