அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

Sep 9, 2024 - 14:01
Sep 9, 2024 - 19:15
 0
அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!
Monkeypox

டெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா ஓய்ந்தபிறகு அவ்வப்போது புதிய வைரஸ் தோன்றி உலகை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது குரங்கம்மை தொற்று புதிதாக அச்சுறுத்தல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட குரங்கம்மை, அதன்பிறகு மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இதனால் குரங்கம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், குரங்கம்மை நோய் இந்தியாவிலும் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய  ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், குரங்கம்மை நோய் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அவசர கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

அதில், ''18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. உடம்பில் அரிப்பு ஏற்பட்டு பின்பு காய்ச்சலாக மாறுவதே குரங்கம்மையின் அறிகுறிகளாகும். இந்த நோய் உடல் தொடர்பு மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது. 

இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மை தொற்று கண்டறியப்படவில்லை. ஆனாலும் மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவரச சிகிச்சை பிரிவுகளை (ICU) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ பணியாளார்களுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களையும் தனிமைப்படுத்துவது அவசியமாகும்'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow