Sattam En Kaiyil Movie 2024 : சூரிக்கு விடுதலை, கருடன்... சதீஷ்க்கு சட்டம் என் கையில்?

Director Chachi Reveils About Actor Sathish Movie Sattam En Kaiyil 2024 : டிரங்க் அண்ட் டிரைவில் சிக்கும் சாதாரண மனிதரான சதீசை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது. தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் என்ன செய்கிறார், எப்படி மாறுகிறார் என்பதை கிரைம், திரில்லர் பின்னணியில் சொல்லி இருக்கிறோம்.

Aug 30, 2024 - 23:16
Aug 30, 2024 - 23:43
 0
Sattam En Kaiyil Movie 2024 : சூரிக்கு விடுதலை, கருடன்... சதீஷ்க்கு சட்டம் என் கையில்?
சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில் 2024

Director Chachi Reveils About Actor Sathish Movie Sattam En Kaiyil 2024 : காமெடியனாக இருந்த சதீஷ் கதைநாயகனாகிவிட்டார். நாய்சேகர், கான்ஜூரிங்கண்ணப்பன் பட வரிசையில், அவர் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். சாச்சி இயக்கியுள்ளார். ‘‘இது, கமல்ஹாசன் பட தலைப்பாச்சே. அந்த கதைக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’ என்று இயக்குனரிடம் கேட்டபோது அவர் கூறியது:

‘‘டி.என்.பாலு இயக்கம், தயாரிப்பில், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த படம் சட்டம் என் கையில். அந்த படத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் கதைக்கு அந்த தலைப்பு சரியாக பட்டது. உடனே கமல்ஹாசன் தரப்பை அணுகினோம். அவர்களும் இது தொடர்பாக டி.என்.பாலு தரப்பிடம் பேசிக்கொள்ளுங்கள் என்றார்கள். அங்கே பேசி முறைப்படி,அவர் மகனிடம் சட்டப்படி தலைப்பு வாங்கி நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். இந்த படத்தில் மூலம்தான் சினிமாவில் அறிமுகம் ஆனார் சத்யராஜ். அவரும் எங்கள் முயற்சியை கேள்விப்பட்டு வாழ்த்தினார்’’ என்றார். 

‘‘இது என்ன கதை’’ என்றால், ‘‘ ஏற்காடு பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் கதை நடக்கிறது. டிரங்க் அண்ட் டிரைவில் சிக்கும் சாதாரண மனிதரான சதீசை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது. தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் என்ன செய்கிறார், எப்படி மாறுகிறார் என்பதை கிரைம், திரில்லர் பின்னணியில் சொல்லி இருக்கிறோம். இரவு ஆரம்பித்து, மறுநாள் காலையில் கதை முடிந்துவிடும். வித்யாபிரதீப், பாவெல், அஜய்ராஜ்  உட்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 20ம் தேதி படம் ரிலீஸ்’’ என்றார்

‘‘ஒரு அதிகாரம், பண பலம் முன்னால் சாதாரண மனிதனால் போராட முடியாது. அப்போது சூழ்நிலை காரணமாக அந்த மனிதன் என்ன செய்கிறான். சட்டத்தை எப்படி கையில் எடுக்கிறார் ஹீரோ என்ற ரீதியில் கதை நகர்கிறது. ஹீரோ சதீஷ் கேரக்டர் பெயர். அவர் என்னவாக இருக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துஇருக்கிறோம். கிளைமாக்சில்தான் அவர் என்பது தெரியவரும். வழக்கமான படங்கள் மாதிரி பாடல், காமெடி கிடையாது. முதல் ஷாட்டிலேயே கதை தொடங்கிவிடும். 80 சதவீத சீன்கள் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும். அதை படமாக்குவது சாவாலான விஷயமாக இருந்தது. எங்கேயும் சீன் போரடிக்காது. திருப்பங்கள், பரபரப்பு வந்துகொண்டே இருக்கும். இந்த படத்துல வித்யாபிரதீப் இருந்தாலும், அவர் சதீசுக்கு ஜோடி அல்ல. இது ஆர்ட் படம் அல்ல. மலையாள பாணியில் நகரும். அதுவே வேகமாக நகரும்வகையில் கமர்ஷியலாக கொண்டு சென்று இருக்கிறோம். கிளைமாக்ஸ் எமோஷனலாக இருக்கும். படம் பார்த்தபின் சதீசுக்கும் நல்ல நம்பிக்கை. தனது இமேஜ் மாறும் என நம்புகிறார். இந்த படத்துக்காக நிறைய இடங்களில் பேசுகிறார். பட ரிலீசுக்கு, புரமோஷக்கு களம் இறங்கி வேலை செய்கிறார். ’’ என்றார்.

‘‘காமெடியில் ஊறிய சதீஷ் இந்த கதைக்கு எப்படி சம்மதித்தார்’’ என்று கேட்டால் ‘‘அவர் காமெடியில் ஊறியவர், அவ்வப்போது தனது பாணியில் ஏதாவது செய்வார், ஏதாவது டயலாக் சொல்வார். ஆனால், நானே இந்த கதைக்கு வேணாம் என்று கண்டிசனாக மறுத்துவிடுவேன். பழைய சதீசை நடை, பாணி, பேச்சு என எதிலும் பார்க்க முடியாது. ஆனால், கிளைமாக்சில் அவரை அந்த கேரக்டரில் ஏற்றுக்கொள்வார். அவர் சண்டையை கூட பார்வையாளர்கள் ஏற்பார்கள். அதுதான். திரைக்கதையின் பிளஸ். கதை மீது இருக்கிற நம்பிக்கையில்தான் கால்ஷீட் கொடுத்தார். இதற்கு முன்பு நான் சிக்ஸர் என்ற காமெடி படம் பண்ணினேன். நானும் இந்த கதையில் முற்றிலும் மாறியிருக்கிறேன்

சூரிக்கு விடுதலை, கருடன் மாதிரி சதீசுக்கு சட்டம் என் கையில் இருக்குமா? நாங்க அப்படிதான் நம்புறோம். அது நடக்கும். பெரும்பாலும் இரவுகாட்சிகளை எடுத்தோம். ஏற்காட்டில் குளிர், மழை, மிருகங்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியி்ல் எடுத்தோம்.இந்த படத்தை கமல்ஹாசன் பார்த்தாரா என்றால், ‘‘சட்டம் என் கையில் கமல்ஹாசன் படம் என்பதால், அவர் இந்த படத்தை பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அடுத்த மாதம் தெரிய வரும். இந்த காலத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் பண்ணுவது கஷ்டம்தான். ஆனாலும், நல்ல கதைகள் ஜெயிக்கும் என்று நம்புகிறோம். சதீஷ் சினிமா வாழ்க்கையிலும் இந்த படம் ஒரு மாற்றத்தை தரும்’ என்றார்

‘‘இந்த படத்தை டிரைலரை, சூரி ரிலீஸ் செய்தாரே? அவருக்கும் சதீசுக்கும் நல்ல நட்பா?’’ என்று விசாரித்தால், ‘‘நீங்க நினைப்பது மாதிரி இரண்டுபேரும் போட்டியாளர்கள்தான். ஆனால், நல்ல நண்பர்கள், கருடன் பார்த்துவிட்டு சூரிசாருக்கு போன் செய்து 1 மணி நேரத்துக்கு மேலாக பாராட்டி பேசினார் சதீஷ். எந்த ஈகோ பார்க்காமல் இந்த பட டிரைலரை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வாழ்த்தினார் சூரி. அவர் மாதிரியே இருவரும் ஜெயிப்பார்’’ என்று முடித்தார் சாச்சி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow