மதத்திலிருந்து விலகி இருங்கள் - திமுக அரசை நேரடியாகக் குற்றம் சாட்டிய கே.பாலகிருஷ்ணன்

மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 24, 2024 - 21:16
Aug 25, 2024 - 09:32
 0
மதத்திலிருந்து விலகி இருங்கள் - திமுக அரசை நேரடியாகக் குற்றம் சாட்டிய கே.பாலகிருஷ்ணன்
மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது. மாநாட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய முதல்வர், “ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்; அவற்றுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. திமுகவின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து கோயில் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. கோயில் வளர்ச்சி, அதில் பணிபுரிவோரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் துணை நிற்கிறது. திடீரென மாநாடு நடத்தவில்லை; பல திருப்பணிகளை திமுக அரசு செய்து முடித்துள்ளது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பிற்காக திமுகவினர் இந்த மாநாட்டை நடத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அனைத்து மதங்களையும் திமுகவினர் அரவணைத்து செய்வதாக இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டிற்கு நேரில் செல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

இந்நிலையில் மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow