உங்களோடோ உலகம் என் கண்ணசைவில்..பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடும் அவ்வா தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது பேரன் பேத்திகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

Aug 8, 2024 - 10:10
 0
உங்களோடோ உலகம் என் கண்ணசைவில்..பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடும் அவ்வா தமிழச்சி தங்கப்பாண்டியன்

இலக்கிய உலகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். அரசியலில் களமாடினாலும் குடும்பத்தினரோடு செலவிடவும் நேரம் ஒதுக்குவார். தனது மகள் வயிற்று பேத்திகளுடன் விளையாடுவது தமிழச்சி தங்கப்பாண்டியனின் பொழுது போக்கு. பிறந்தநாளை கொண்டாடு பேரன் பேத்திகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன். அந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

தமிழச்சியின் அப்பா தங்கபாண்டியன்,கருணாநிதி அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். தமிழச்சியின் இயற்பெயர் சுமதி.தமிழச்சி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். தமிழச்சி தங்கப்பாண்டியன் என்று பெயர் வைத்தவர் திமுக முன்னாள் தலைவரும் மறைந்த முதல்வருமான மு.க கருணாநிதி. தமிழச்சியின் சகோதரர்  தங்கம் தென்னரசு தற்போது மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருக்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்பியாக டெல்லி சென்றார். 5ஆண்டுகாலம் திமுகவின் குரலாக ஒலித்தார் தமிழச்சி. தற்போது மீண்டும் வென்று நாடாளுமன்றம் சென்று முதல் பேச்சிலேயே தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

என்னதான் பிசியான அரசியல்வாதியாக இருந்தாலும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி பேரன் பேத்திகளுடன் விளையாடுவதுதான் அவரது பொழுது போக்கு. இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் பேரன் பேத்திகளுக்கு 'அவ்வா' தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார். 


‘ அவ்வா’ வாய் எனை ஆக்கிய 
அரும்பெரும் செல்வங்களுக்கு…
உங்கள் அம்மாவைக் கையிலேந்திய கணத்தில்
உலகம் என் உள்ளங்கையில்-
உங்களோடோ உலகம் என் கண்ணசைவில்!
உங்களின் ஒவ்வொரு அசைவும் என் வானவில்லின் திறவுகோல்!
அழுகையும் சிரிப்பும் இடறலும் மழலையும்
கட்டி முத்தங்களும் - என் 
அம்மாவை நான் உணரும் அற்புத வரம்!
இற்றை இப்பிறவிக்கான
என் இருப்பின் பெரு மகிழ்வென
வந்துதித்த இரு நிலவுகளே…
என்னை உயிர்ப்பித்து உய்விக்க
பல நூறு பிறந்த நாட்கள் வரட்டும் உங்களுக்கு!
என் அரும் ஆதிராவிற்கும், அதியனுக்கும்
அவ்வாவின் பிறந்த நாள் வாழ்த்துகள்
கட்டி முத்தங்கள் என் பெத்தாருகளா

என்று தனது முகநூல், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.  இதனைப் பார்த்த பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow