Asna Cyclone Update : அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல்.. என்ன அர்த்தம் தெரியுமா?-துறைமுகங்களில் அலர்ட்

Asna Cyclone Alert in Tamil Nadu : அரபிக்கடல் பகுதியில் உருவான அஸ்னா புயலையொட்டி கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Aug 31, 2024 - 13:01
Aug 31, 2024 - 13:17
 0
Asna Cyclone Update : அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல்.. என்ன அர்த்தம் தெரியுமா?-துறைமுகங்களில் அலர்ட்
asna cyclone form arebian sea

Asna Cyclone Alert in Tamil Nadu : கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு 'அஸ்னா' என பாகிஸ்தான் நாடு பெயரிட்டு இருக்கிறது.இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

புயலுக்கு பெயர் சூட்டும் நடைமுறை பல மேலை நாடுகளில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தான் இந்த நடைமுறை தொடங்கியது. அகவரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயா்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு புதிய புயல் உருவாகும் போதும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 19ஆம் நூற்றாண்டில், வானிலை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் புயல்களுக்கு தன்னிச்சையாக பெயா் சூட்டி வந்தனர். அப்போது தங்களுக்கு பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயர்களை சூட்டி வந்தாா்கள் என்று கூறப்படுகிறது. புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர் பிரிட்டனை சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் என்பவா் தான்.

இவர் முதலில் பிரிட்டனிலும், பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலை அளவீடுகளை கருவிகள் கொண்டு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வந்துள்ளார். முதலில் கிரேக்க எழுத்துக்களை கொண்ட பெயர்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் அவர் புயல்களுக்கு சூட்டி வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் புயலானது உருவாகக்கூடும். அப்படி உருவாகும் வெவ்வேறு புயல்களை அறியவும், அவற்றை வேறுபடுத்திக் காட்டவும் தான் இந்த புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அரபிக்கடலில் உருவான புயலுக்கு அஸ்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. உருதுவில் அஸ்னா என்றால் "ஒப்புக்கொள்ளப்பட வேண்டியவர் அல்லது பாராட்டப்பட வேண்டியவர்" என்று பொருளாகும். 

அஸ்னா புயலானது கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயலாக அஸ்னா புயல் உருவாகி உள்ளது.

அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில்,இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி இது குஜராத்தின் நலியாவுக்கு மேற்கே 250 கிமீ, தென்-தெற்கு மேற்கே 160 கிமீ தொலைவில் நகர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து சென்றுவிடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை ஒட்டி கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இதே போல நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow