தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

Jul 30, 2024 - 10:58
Jul 30, 2024 - 18:22
 0
தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி
BJP Selvakumar Murder in Sivagangai

BJP Selvakumar Murder in Sivagangai : சிவகங்கை அருகே எம்.விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (52). இவர் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 27ஆம் தேதி சாத்தரசன்கோட்டையில் இருந்து எம்.வேலாங்குளம் கிராமத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து ஆயுதங்களால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்வகுமார் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனி படையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலையில் தொடர்புடைய, மருதுபாண்டி, அருண்குமார் (எ) தொத்தல், வசந்தகுமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகிய 5 பேரை மதுரையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மேலப்பிடாவூரை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இறந்த பாஜக நிர்வாகி செல்வக்குமார் மறைமுகமாக உதவி செய்த காரணத்தால் அவரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட வைரம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (25) என்பவர் அளித்த தகவலின்பேரில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுப்பதற்காக போலீஸார் நேற்று பிற்பகலில் அவரை புதுப்பட்டி கிராமத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தை போலீஸார் ஆய்வு செய்த பொழுது, அருகில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு தப்பியோடியபோது, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தனது கைத்துப்பாக்கியால் வசந்தகுமாரை  காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் மற்றும் வசந்த்குமார் ஆகிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன் பின்பு வசந்தகுமார் மேல் சிகிச்சைக்கி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow