September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகம்..ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்!

September Month Rasi Palangal 2024 : செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசியில் சுக்கிரன் கேது உடன் இணையப்போகும் சூரியனுக்கு குருவின் பார்வையும் ராகுவின் பார்வையும் கிடைக்கிறது. இந்த கிரகங்களின் கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Sep 2, 2024 - 12:45
Sep 3, 2024 - 10:24
 0
September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகம்..ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்!
September Month Rasi Palangal 2024

September Month Rasi Palangal 2024 : செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். ஆங்கில மாதத்தின் 9வது மாதமான செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியன்  16ஆம் தேதிக்குப் பிறகு கன்னி ராசியில் கேது, சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். 18ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது நீச்ச நிலையில் இருந்து ஆட்சி பெற்ற நிலைக்கு சென்று துலாம் ராசிக்கு சென்று அமரப்போகிறார். புதன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். மாதம் முழுவதும் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் மீன ராசியிலும் சனி கும்ப ராசியிலும் பயணம் செய்ய ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

தனுசு: 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் செழுமையான மாதமாகும். வெளியிடங்கள், பணியிடங்களில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் பயணம் செய்வதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். அப்பா வழி உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து போகும். செவ்வாய் பகவான் 7ஆம் வீட்டில் மாதம் முழுவதும் பயணம் செய்வதால் கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவைப்படும். காதலிப்பவர்களுக்கு மோதல் சாத்தியமாகும் என்பதால் பொறுமையை கடைபிடிக்கவும். வெளியூர் பயணங்கள் செல்ல இருப்பதால் உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம். வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். 

மகரம்:  

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் நிதானமும் பொறுமையும் அவசியம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிஸியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் வருமானம் இரட்டிப்பாகும்.விபரீத ராஜயோகம் மாத முற்பதியில் கைகூடி வரும். காதலிப்பவர்களுக்கு இது அற்புதமான மாதம். திருமண முயற்சிகள் கைகூடி வரும். மாதத்தின் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.மாத பிற்பகுதியில் சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெறுவது மாளவியா யோகம். பதவியோகமும் தேடி வரும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். 

கும்பம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு செப்டம்பர் மாதம் திடீர் வருமானத்தை தரப்போகிறது. இதுநாள் வரைக்கும் இருந்த நிதிச்சிக்கல்கள் நீங்கப்போகிறது. வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றியும் முதலீடுகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். வார்த்தைப்போரை தவிர்க்கவும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்கு ஸ்தானத்தில்  ராகு பயணம் செய்வதால் பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும். 


மீனம்: 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த மாதம் மனக்குழப்பங்கள் சற்றே அதிகரிக்கும். ராசியில் உள்ள ராகு சற்றே மன குழப்பத்தை ஏற்படுத்துவார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை இந்த மாதம் ஏற்ற இறக்கத் தோடு இருக்கும். சொந்த பந்தங்களிடையே பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும். மாணவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சவால்களை சந்தித்து சாதிப்பீர்கள். வெளியூர் பயணங்களிலும் இரவு நேர பயணங்களிலும் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் காரமான உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow