School Holiday : விடாது வெளுக்கும் கனமழை.. நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

School Holiday Announces in Nilgiris District : நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Jul 30, 2024 - 07:38
Jul 30, 2024 - 18:20
 0
School Holiday : விடாது வெளுக்கும் கனமழை.. நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday Announces in Nilgiris District

School Holiday Announces in Nilgiris District : கர்நாடகா, கேரளா  மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை நீடித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக 100 அடி நீர்தேக்க உயரம் கொண்ட பில்லூர் அணை கடந்த மாதம் 27.06.24 ம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

அடுத்ததாக இம்மாதம் 16 ம் தேதி மீண்டும் அணை அதன் நிரம்பி  தொடர்ந்து 5 நாட்களுக்கு 21 ம் தேதி வரை அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது..அடுத்ததாக கடந்த 26 ம் தேதி காலை அணை மீண்டும் நிரம்பி அணைக்கான நீர்வரத்து அப்படியே இரண்டு நாட்கள் திறந்து விடப்பட்டது.தற்போது கன மழை காரணமாக பில்லூர் அணை 4 முறையாக நிரம்பி வழிகிறது.பில்லூர் அணை தொடர்ந்து நிரம்பி அணையில் இருந்து பவானியாற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் நேரிடையாக பவானிசாகர் அணையை சென்றடையும் என்பதால் அந்த அணையின் நீர்மட்டமும் வேகமாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில்(Heavy Rain in Nilgiris District) தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது மரமுறிவு, நிலச்சரிவு, மின்சாரம் துண்டிக்கப்படுதல் என பல விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை(School Holiday Declared Today) அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு. உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 -  28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow