2026 சட்டசபைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி.. பாஜக பலமாக உள்ளது.. அண்ணாமலை நம்பிக்கை

BJP Annamalai About Tamil Nadu Assembly Elections 2026 : தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மூத்த தலைவர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கட்சியினரின் கருத்துகளைக் கேட்டுள்ளனர். இவற்றை ஆராய்ந்து, கட்சியை வலுப்படுத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Jul 30, 2024 - 07:56
Jul 30, 2024 - 18:21
 0
2026 சட்டசபைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி.. பாஜக பலமாக உள்ளது.. அண்ணாமலை நம்பிக்கை
BJP Annamalai About Tamil Nadu Assembly Elections 2026

BJP Annamalai About Tamil Nadu Assembly Elections : 2026 ஆம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத்தலைவராக அண்ணாமலை(BJP Leader Annamalai) பொறுப்பேற்ற பிறகு கட்சியை வளர்க்க கடும் முயற்சி செய்து வருகிறார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அண்ணாமலையின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து போட்டியிருந்தால் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களே கூறி வருகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாராக இல்லை.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக அறிவித்து விட்டார். நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியானது 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில்(Assembly Election 2026) களமிறங்க உள்ளது. பல கட்சி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழக வெற்றிக்கழகம் மாற வாய்ப்பு உள்ளது. 

நாம் தமிழர் கட்சியும் வலிமையான கட்சியாக மாறி வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற `பாஜக பூரண சக்தி கேந்திரம் எனது இலக்கு' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை(Annamalai), செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் பெற்று, 3-ல் ஒரு வாக்குச்சாவடியில் முதலிடம் அல்லது 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கட்சிப் பணியாற்றி, அதிக வாக்குகள் பெறச்செய்த கட்சி உறுப்பினர்களைப் பாராட்டி வருகிறோம்.

மத்திய பட்ஜெட்டில் அனைத்துமாநிலங்களுக்கும் ரூ.48 லட்சம்கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. தமிழகத்தை புறக்கணிக்க முடியாது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று திமுக பேசுவது அரசியலுக்காகத்தான். நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது மைக்கை ஆஃப் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அவர் 7 நிமிடங்கள் பேசியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகமுதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. 2022 முதல் அவர் நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்துகொள்வது இல்லை. இவ்வாறு அரசியல் செய்வது சரியில்லை என்று கூறினார் அண்ணாமலை(Annamalai).

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். எனவே, 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow