633 இந்திய மானவர்கள் வெளிநாடுகளில் மரணம் - நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்

Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad : கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு வகைகளில் மரணம் அடைந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 30, 2024 - 07:21
Aug 1, 2024 - 11:49
 0
633 இந்திய மானவர்கள் வெளிநாடுகளில் மரணம் - நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad

Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad : நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பித்தார்.

2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், இயற்கை பேரிடர்கள், உடல்நலக் கோளாறுகள், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகப்படியாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், ஜார்ஜியா, கிர்கிஸ்தான், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் தலா 12 பேரும் பாகிஸ்தானில் ஒருவர் என மொத்தம் 41 நாடுகளில் இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல்கள் மூலம் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 என அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். அதில், கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர், ஆஸ்திரேலியாவில் ஒருவர், சீனாவில் ஒருவர், இங்கிலாந்தில் ஒருவர் மற்றும் கிர்கிஸ்தானில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர் கூறுகையில், “வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவது இந்திய அரசாங்கத்தின் முதன்மையான விஷயங்களில் ஒன்று. வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பணிகள் மற்றும் பதவிகள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்புகளைப் அரசாங்கம் பேணி வருகிறது” என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow