சசிகலா பின்னாடி யாருமே இல்லை.. தலையை ஆட்டி ரசித்த பெண் எங்கே?..தேடிய மீம் கிரியேட்டர்ஸ்

போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தனது பின்னால் யாரையும் நிற்கவிடாமல் தனியாக நின்று பேசியுள்ளார். சசிகலாவின் பின்னால் நின்ற பெண் காட்டிய முக பாவனைகள் ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதால் இம்முறை யாரையும் பின்னால் நிற்கவிடாமல் தவிர்த்து விட்டார் சசிகலா.

Jul 3, 2024 - 18:12
 0
சசிகலா பின்னாடி யாருமே இல்லை.. தலையை ஆட்டி ரசித்த பெண் எங்கே?..தேடிய மீம் கிரியேட்டர்ஸ்
sasikala press meet today

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது ஆன்மீக சுற்றுலா, தொண்டர்களுடன் சந்திப்பு என பேசி வருவார். அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வந்த சசிகலா சமீபகாலமாக செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டன.  மீதம் இருக்கும் 10 சதவீதப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதிமுகவில் நான் இருக்கிறேனா என்பதை சுற்றுப்பயணம் செல்லும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்.ஜெயலலிதா எத்தனை நல்லவர், ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு, இதையெல்லாம் தெரிந்து ஜெயலலிதாவின் புகைப்படத்தை இப்போது உபயோகப்படுத்துகிறார்கள்.
அதிமுக தொண்டர்களின் மனநிலை ரொம்ப நன்றாக இருக்கிறது, எல்லோரும் எல்லா மாவட்டத்துக்கும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ரேஷன் பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு, அது முறையாக நடத்தப்படவில்லை, பாமாயில், பருப்புக்கு ஒழுங்காக டெண்டர் விடவில்லை. ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்கவில்லை.சட்டசபையில் இதுபற்றி பேச சரியான ஆள் இல்லை. அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது தவறு, மக்கள் பிரச்சனையை பேச வேண்டும்.

அதிமுகவில் நான் இல்லை என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. என்னுடைய 24 வயதிலிருந்து அதிமுகவில் இருக்கிறேன், சுற்றுப்பயணம் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க தானே போகிறீர்கள். கோடநாடு வழக்கில், சட்டப்பேரவை முதலமைச்சர் பதிலில் நம்பிக்கை இல்லை, தேர்தல் நேரத்தில் குற்றவாளிகள் பிடித்து விடுவேன் என்று சொன்னார். இப்போது இன்டர்போல் உதவி கேட்பது என்பது, 20 -30 வருஷம் ஆகும் போல என்று கூறினார் சசிகலா. 

கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் தொண்டர்கள் புடை சூழ பேட்டி அளித்த சசிகலா இந்த முறை தொண்டர்களை தனக்குப் பின்னால் நிற்க அனுமதிக்கவில்லை அதற்குக் காரணம் சசிகலாவின் பின்னால் நின்ற பெண்தான்.சசிகலா பேட்டி கொடுத்த போது அவருக்கு பின்னால் நின்றிருந்த பெண் தொண்டர் தலையை ஆட்டியபடி காட்டிய முக பாவனைகள் மீம்  கன்டென்ட் ஆகி சமூக வலைதளங்களில் வைரலானது இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா இந்த முறை தனக்கு பின்னால் யாரையும் நிற்க அனுமதிக்கவில்லை. கடந்த முறை போன்று இந்த முறையும் ஏதேனும் தொண்டர்களின் ரியாக்ஷன் மீம் கண்டென்ட் ஆகி விடுமோ எனக் கருதியதால் யாரையும் நிற்க வைக்காமல் தனியாக நின்று பேட்டியளித்தார் சசிகலா. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow