Coolie: ரஜினியுடன் இணைந்த விக்ரம் பட பிரபலம்… லோகேஷின் கூலி அப்டேட்ஸ் லோடிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள கூலியில், கமலின் விக்ரம் பட பிரபலம் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளார்.

Jul 3, 2024 - 23:21
Jul 3, 2024 - 23:32
 0
Coolie: ரஜினியுடன் இணைந்த விக்ரம் பட பிரபலம்… லோகேஷின் கூலி அப்டேட்ஸ் லோடிங்!
கூலியில் இணைந்த கிரிஷ் கங்காதரன்

சென்னை: வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், அன்பறிவ் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். ஜூன் மாதமே இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், ரஜினி பிஸியாக இருந்ததால் கொஞ்சம் லேட்டானதாக தெரிகிறது. இதனையடுத்து ஜூலையில் கூலி படப்பிடிப்பை தொடங்க லோகேஷ் கனகராஜ் ரெடியாகிவிட்டார். 

முதலில் கூலி டைட்டில் டீசர் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஷ் செய்யும் போட்டோவை லோகேஷ் ஷேர் செய்திருந்தார். அப்போதே அவர் கூலி படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருந்தார். ஜூலை மாதம் ஆரம்பித்துவிட்டதால் கூலி அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு தற்போது சர்ப்ரைஸ்ஸாக அப்டேட் கொடுத்துள்ளார் லோகேஷ். அதன்படி கூலி படத்தின் சினிமோட்டோகிராபராக கிரிஸ் கங்காதரன் இணைந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்திற்கும் கிரிஸ் கங்காதரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விக்ரம் படத்தின் ஆக்ஷன் சீன்ஸ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக அந்தப் படத்தின் இடைவேளை காட்சிக்கு முன்பு வரும் ஸ்டண்ட் சீன் தெறிமாஸ்ஸாக இருந்தது. அதனால் கூலி படத்திலும் தரமான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். கூலியில் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதை அறிவித்துள்ள லோகேஷ், அதே ட்வீட்டில் இன்னொரு மெர்சலான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். அதாவது கூலி படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பதும் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கவிருப்பதை சத்யராஜ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ஆனாலும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அபிஸியலாக அறிவிக்கவில்லை. அதனால் முதலில் சத்யராஜ் அப்டேட் தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கூலி படத்தில் இணைந்துள்ள மற்ற நடிகர்களின் லிஸ்ட் அடுத்தடுத்து வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஸ்ருதி ஹாசன், மலையாள நடிகர் திலீப் குமார் ஆகியோரும் கூலியில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow