சக்கர வியூகத்தில் சிக்கிய இந்தியா.. கட்டுப்படுத்தும் 6 பேர்.. ராகுல் காந்தி கடும் தாக்கு!

Rahul Gandhi Speech At Parliamanet : சக்கர வியூகம் தாமரைப் பூவின் வடிவில் இருக்கும், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளனர் என்று எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்த சக்கர வியூகத்தை 6 பேர் கட்டுப்படுத்துகின்றனர் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Jul 29, 2024 - 15:14
Jul 29, 2024 - 15:49
 0
சக்கர வியூகத்தில் சிக்கிய இந்தியா.. கட்டுப்படுத்தும் 6 பேர்.. ராகுல் காந்தி கடும் தாக்கு!
Rahul Gandhi Speech At Parliamanet

Rahul Gandhi Speech At Parliamanet : அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்தது போல் இந்தியாவை சிக்க வைத்துள்ளனர். சக்கர வியூகம் தாமரைப் பூவின் வடிவில் இருக்கும்; இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளனர்;அந்த சக்கர வியூகத்தை 6 பேர் கட்டுப்படுத்துகின்றனர் என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக பட்ஜெட் உரை மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசினார். மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அவரது இன்றைய பேச்சில் அனல் பறந்தது. 

எனது நண்பர்கள் சிரிக்கிறார்கள், ஆனால் அச்சத்தில் உள்ளனர். பாஜகவை பொறுத்தவரை ஒரே ஒருவர் தான் எப்போதும் பிரதமர் மற்றவர்கள் பிரதமராக அச்சப்படுவர். ஆளுங்கட்சியைப் போல் விவசாயிகள், இளைஞர்களும் அச்சத்தில் தான் உள்ளனர். நாடு முழுவதும் அச்ச மனநிலையே நிலவுகிறது."அபிமன்யு சக்கரவியூகத்தில் சிக்கினார் அதுபோல் இந்தியாவே மோடியிடம் சிக்கிக் கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அப்போது பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அமளிக்கிடையே தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,சக்கரவியூகத்தின் 3 திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்டு வருகிறது.ஒன்று நிதிமூலம், 2வது மத்திய புலனாய்வு அமைப்புகள், 3வது அதிகார துஷ்பிரயோகம். சிறு வணிகர்களை குறிவைத்து வரி பயங்கரவாதம் ஏவப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு மீது விளக்கம் அளிக்காமல் இளைஞர்கள் எதிர்காலம் குறித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதா?.

இந்திய இளைஞர்களுக்கு நீங்கள் செய்தது என்ன?. அக்னிவீர் பென்சனுக்கு ஒரு ரூபாய் கூட பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. கல்விக்கு மிகக்குறைந்த நிதியை ஒதுக்கியது ஏன்?.இந்த பட்ஜெட்டால் நாட்டில் ஒரு இளைஞருக்கு கூட வேலைவாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் இந்த பட்ஜெட் வரை மோடியை ஆதரித்தனர் இனி இல்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது.குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் சாத்தியமே. நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்காலத்தை இந்த பட்ஜெட் குத்திக் கொலை செய்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மசோதாவை இந்தியா கூட்டணி தாக்கல் செய்யும் என்றார்.

அதானியும் அம்பானியும் தான் இந்தியப் பொருளாதாரத்தை இயக்குகின்றனர் என்ற சொன்ன உடன் குறுக்கிட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். மக்களவையின் மாண்பை ராகுல்காந்தி சிதைத்து வருகிறார்.சபாநாயகருக்கு எதிர்கட்சித் தலைவர் சவால் விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பாஜகவினரை பாதுகாக்க கிரண் ரிஜிஜூவுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. குற்றவாளிகள் A1, A2 ஆன அதானி, அம்பானியையும் பாஜக பாதுகாப்பது போல் யாராலும் பாதுகாக்க முடியாது. எங்கள் கேள்விகளுக்கு பிரதமர் செவிசாய்த்து பதிலளித்தால், நாங்களும் பணிவுடன் பதிலளிக்கிறோம் என்றார்.இதனையடுத்து போஸ்டரை காட்டி பேசிய ராகுல் காந்தி, அல்வா சமைக்கும் நிகழ்வில் கூட ஓபிசி, தலித் நிர்வாகிகளை நிதியமைச்சர் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. பிரதமரின் தன்னம்பிக்கையை நடுத்தர வர்க்கத்தினர் உடைத்தெறிந்துள்ளனர் என்றார். அப்போது, 
ராகுல் காந்தியின்  பேச்சைக் கேட்டு தலையில் கை வைத்து சிரித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாட்டின் 95 சதவிகிதம் பேர், மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.இந்தியாவின் இயற்கையையும் கலாசாரத்தையும் பாஜகவினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்துயிசத்தை பாஜகவினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow