ஊழல் புகார்.. சித்தராமையாவை பதவி விலக சொல்வீர்களா? ராகுலைத் தாக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அவரை பதவி விலகச் சொல்வாரா என்று ராகுல் காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

Aug 19, 2024 - 10:49
 0
ஊழல் புகார்.. சித்தராமையாவை பதவி விலக சொல்வீர்களா? ராகுலைத் தாக்கும் திரிணாமுல் காங்கிரஸ்
tmc vs rahul gandhi

கொல்கத்தா பாலியல் வன்முறை சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறியாமல், மமதா பானர்ஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய ராகுல் காந்தி தற்போது சித்தராமையா மீது தகுந்த நடவடிக்கை எடுப்பாரா என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் பணியில் இருந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்து வந்த 31வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி  நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் கூட #JusticeFor என ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதே போல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். 
கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்து வந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது வருத்தமளிக்கிறது. பெண் டாக்டர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள் அவர்களை எங்கே அனுப்புவார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றவாளி பாதுகாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்ததையடுத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என சித்தராமையா விளக்கமும் அளித்திருந்தார். இந்த சூழலை சாதகமாக்கி சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. 

அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் மீதும் மமதா பானர்ஜி மீதும் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, தற்போது காங்கிரசை சேர்ந்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை பதவி விலகச் சொல்வாரா என திரிணாமுல் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை எம்.பி  கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், கொல்கத்தா சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறியாமல், மமதா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய ராகுல்ர காந்தி தற்போது சித்தராமையா மீது தகுந்த நடவடிக்கை எடுப்பாரா எனவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இப்பதிவால், ராகுல் காந்தி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸும் இவ்வாறு சமூக வலைதளத்தில் மாறி மாறி தாக்கிக்கொள்வது இந்தியா கூட்டணிக்கு நல்லதல்ல என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow