கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்றும் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இனைந்துள்ள டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேறவேற்றுள்ளார்.
'டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்'
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'" என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி Speech Rewind
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் 'எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம்” என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், "விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை" என்று கூறினார்.

LIVE 24 X 7