தமிழக அரசியலில் "ஒன்றுபட்ட அதிமுக" என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அவரது அணியில் இருந்த முக்கியத் தலைவர்கள் வரிசையாக விடைபெறுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மாற்றுப் பாதையைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-இன் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
பதவி ராஜினாமாவும் அறிவாலய வருகையும்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, வைத்திலிங்கம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தஞ்சை அரசியலில் வைத்திலிங்கத்தின் பலம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர். டெல்டா மாவட்டங்களில் அதிமுக-வின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர், இப்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது அந்தப் பகுதியில் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணிக்குக் கூடுதல் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
வரிசை கட்டும் 'வாக்-அவுட்' தலைவர்கள்
சமீபகாலமாக ஓபிஎஸ் அணியில் இருந்த சீனியர் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் ஆகியோரும் உதயசூரியன் நிழலில் ஒதுங்கினர். இதேபோல், மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
ஓபிஎஸ்-க்கு நெருக்கடி
தனது அணியின் தூண்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் அடுத்தடுத்து வெளியேறுவது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மறுபுறம், மூத்த தலைவர்களின் வருகை திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்குப் பலம் சேர்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

LIVE 24 X 7